பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
2026-27-ம் பருவத்திற்கு, கரும்பு விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ₹365 வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
05 MAY 2026 6:43PM by PIB Chennai
கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2026-27-ம் ஆண்டுக்கான (அக்டோபர் - செப்டம்பர்) சர்க்கரைப் பருவத்திற்கு, 10.25% அடிப்படை மீட்பு விகிதத்திற்காக, கரும்பின் நியாயமான, லாபகரமான விலை குவிண்டாலுக்கு ₹365 என வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், 10.25%-க்கு மேல் மீட்பு விகிதத்தில் ஏற்படும் ஒவ்வொரு 0.1% அதிகரிப்பிற்கும் குவிண்டாலுக்கு ₹ 3.56 கூடுதல் விலை வழங்கப்படும்.
கரும்பு விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில், 9.5%-க்கும் குறைவாக கரும்பு கொள்முதல் செய்யப்படும் சர்க்கரை ஆலைகளுக்கு எந்தப் பிடித்தமும் செய்யப்படாது என அரசு முடிவு செய்துள்ளது. அத்தகைய விவசாயிகள், வரவிருக்கும் 2026-27 சர்க்கரைப் பருவத்தில் ஒரு குவிண்டால் கரும்புக்கு ₹ 338.3 பெறுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2258113®=3&lang=2
***
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2269993)
आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Marathi
,
Telugu
,
Malayalam
,
Kannada
,
Assamese
,
Bengali
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia