பிரதமர் அலுவலகம்
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
06 JUN 2026 6:22PM by PIB Chennai
பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் நேரிட்ட விபத்து குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளார். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் நேரிட்ட விபத்து குறித்த செய்தி அறிந்து ஆழ்ந்த மனவேதனை அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக தலா 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000-மும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும். : பிரதமர் நரேந்திர மோடி"
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269831®=3&lang=1
(Release ID: 2269831)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2269870)
आगंतुक पटल : 13