பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் கூட்டம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 06 JUN 2026 6:20PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (06.06.2026) பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். இந்தியாவின் பொருளாதார மாற்றம், நீண்டகால வளர்ச்சி முன்னுரிமைகள் ஆகியவை தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

 

சீர்திருத்தப் பயணத்திற்கு மேலும் உத்வேகம் அளிப்பது, வாழ்க்கையை எளிமைப்படுத்துதல், தொழில் செய்வதில் எளிமை ஆகியவற்றை உறுதி செய்வது குறித்தும் கருத்துக்கள் பகிரப்பட்டதாக திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

 

"பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் கூட்டத்திற்குத் தலைமை வகித்தேன். இந்தியாவின் பொருளாதார மாற்றம், நீண்டகால வளர்ச்சி முன்னுரிமைகள் ஆகியவை தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தேன். மேலும், சீர்திருத்தப் பயணத்திற்கு கூடுதல் உத்வேகம் அளிப்பது, வாழ்க்கையை எளிமைப்படுத்துதல், தொழில் செய்வதில் எளிமை ஆகியவற்றை உறுதி செய்வது குறித்த கண்ணோட்டங்களையும் பகிர்ந்து கொண்டேன். @EACtoPM"

(Release ID : 2269829)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2269847) வருகையாளர் எண்ணிக்கை : 88