நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
சமையல் எண்ணெய்களுக்கான தரப்படுத்தப்பட்ட பேக்கிங் அளவுகள் - நுகர்வோர் விவகாரத்துறை பரிந்துரை
प्रविष्टि तिथि:
06 JUN 2026 4:04PM by PIB Chennai
வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் நியாயமான வர்த்தக நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம், சட்ட அளவியல் கட்டமைப்பின் கீழ் சமையல் எண்ணெய்களின் நிகர அளவு, தரநிலை பேக்கிங் அளவுகளை நிர்ணயிப்பதற்கான 29.12.2023 தேதியிட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறையை திருத்தியுள்ளது.
நாட்டில் முக்கிய சமையல் எண்ணெய் தொழில் சங்கங்களுடன் நடத்தப்பட்ட விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சந்தையில் பல்வேறு அளவுகளில் பொட்டலங்கள் பெருகி வருவதைச் சரிசெய்வதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏனெனில், இத்தகைய பொட்டலங்கள் நுகர்வோர் விலைகளை ஒப்பிட்டு, தகவலறிந்த கொள்முதல் முடிவுகளை எடுப்பதை பெரும்பாலும் கடினமாக்குகின்றன.
எனவே சமையல் எண்ணெய் பேக்கேஜிங், லேபிளிங்கில் நுகர்வோரை மையமாகக் கொண்ட முக்கிய சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முக்கிய சமையல் எண்ணெய்களுக்கு நிலையான பேக்கிங் அளவுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. நுகர்வோர், பல்வேறு பிராண்டுகளின் விலைகளை எளிதாக ஒப்பிட்டு, பணத்திற்கான மதிப்பைத் துல்லியமாக மதிப்பிட முடியும்.
வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக கன அளவு, அதற்கு சமமான எடை ஆகிய இரண்டையும் அறிவிக்க வேண்டும். உள்நாட்டில் தயாரிக்கப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்கள் ஆகிய இரண்டிற்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும்.
உற்பத்தியாளர்கள், பேக்கிங் செய்பவர்கள், இறக்குமதியாளர்கள் ஆகியோருக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட செயல்பாட்டு நடைமுறையானது, பாமாயில், சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், கடுகு/ரேப்சீட் எண்ணெய், நிலக்கடலை எண்ணெய், எள் எண்ணெய், அரிசித் தவிடு எண்ணெய், பருத்திவிதை எண்ணெய், மக்காச்சோள எண்ணெய் உள்ளிட்ட முக்கிய சமையல் எண்ணெய்களுக்கான நிலையான பேக்கிங் அளவுகளைப் பரிந்துரைக்கிறது.
அனுமதிக்கப்பட்ட நிலையான பேக்கிங் அளவுகள் பின்வருமாறு:
200 மிலி/கி
500 மிலி/கி
1 லிட்டர்/கிலோ
2 லிட்டர்/கிலோ
3 லிட்டர்/கிலோ
4 லிட்டர்/கிலோ
5 லிட்டர்/கிலோ
15 லிட்டர்/கிலோ
20 லிட்டர்/கிலோ
இந்த நிலையான அளவுகள், நுகர்வோர் வெவ்வேறு பிராண்டுகளின் விலைகளை எளிதாக ஒப்பிட்டுப் பார்க்கவும், தகவலறிந்த கொள்முதல் முடிவுகளை எடுக்கவும் உதவும்.
நுகர்வோர் தேர்வைப் பாதுகாத்தல்
200 மில்லி அல்லது 200 கிராமுக்குக் குறைவான பேக்கேஜ்கள் தரப்படுத்தலின் வரம்பிற்கு வெளியே தொடர்ந்து இருக்கும். இது நுகர்வோருக்கு மலிவு விலையில் சிறிய பேக்குகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்கிறது. சிறு அளவிலான சமையல் எண்ணெய்களுக்கும் தரப்படுத்தப்பட்ட பேக் அளவுத் தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சமையல் எண்ணெய்கள், இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்கள் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும். சந்தையில் வெளிப்படைத்தன்மை, நேர்மை, நுகர்வோர் நம்பிக்கை ஆகியவற்றை ஊக்குவிக்கும் சீர்திருத்தங்கள் மூலம் நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதில் நுகர்வோர் விவகாரத் துறை உறுதியாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269789®=3&lang=1
(Release ID: 2269789)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2269807)
आगंतुक पटल : 14