பிரதமர் அலுவலகம்
பிரக்ஞானந்தாவின் மகத்தான சாதனைக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
06 JUN 2026 2:16PM by PIB Chennai
நார்வே செஸ் தொடரில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற பிரக்ஞானந்தாவின் மகத்தான சாதனைக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது அவரது தொடர்ச்சியான சிறப்புத் தன்மையை எடுத்துக்காட்டும் ஒரு சிறந்த மைல்கல் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு திரு நரேந்திர மோடி தமது நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"மகத்தான சாதனைக்காக பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்துகள்!
இது அவருடைய தொடர்ச்சியான சிறப்புத் தன்மையை எடுத்துக்காட்டும் ஒரு மகத்தான மைல்கல் என்பதில் சந்தேகமில்லை. அவருடைய எதிர்கால முயற்சிகளுக்கு என் நல்வாழ்த்துகள். @rpraggnachess"
(Release ID: 2269739)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2269757)
வருகையாளர் எண்ணிக்கை : 63
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada