நிதி அமைச்சகம்
சமபங்குத் துறையில் வெளிநாட்டு பங்கு மூலதனத்தை அதிகரிக்கவும் அரசு பங்குகளின் சந்தையை ஆழப்படுத்தவுமான நடவடிக்கைகளை அரசு அறிவித்துள்ளது
प्रविष्टि तिथि:
05 JUN 2026 10:41AM by PIB Chennai
உலகளாவிய முதலீட்டில் முன்னிலை வகிப்பதிலும், மூலதனச்சந்தையை ஆழப்படுத்துவதிலும் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தும் அரசின் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப மத்திய நிதியமைச்சகம் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிற்கு வெளியே வாழும் தனிநபர்கள், வெளிநாட்டு பங்கு முதலீட்டாளர்கள் ஆகியோர் எளிதாக முதலீடு செய்வதை விரிவாக்குவதும் நீண்டகால வெளிநாட்டு மூலதன மரபை ஈர்ப்பதும் இதன் நோக்கமாகும்.
பங்குகள் முதலீட்டுத் திட்டத்தின் மூலம் பட்டியலிடப்பட்ட இந்திய நிறுவனங்களின் சமபங்கு முதலீட்டுக்கு இந்தியாவிற்கு வெளியே வாழும் தனிநபர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் துறை அமைச்சர் அறிவித்தார். இதுவரை இது வெளிநாடு வாழ் இந்தியர்கள் / இந்தியாவில் உள்ள வெளிநாட்டு குடிமகன்கள் ஆகியோருக்கு மட்டுமே பொருந்தியிருந்தது. இந்தத் திட்டத்தின் கீழ், இந்தியாவிற்கு வெளியே வாழும் தனிநபர்களின் முதலீட்டு வரம்பு எந்த நிறுவனத்திலும் 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக அதிகரிக்கப்படும். இவர்களுக்கான ஒட்டுமொத்த முதலீடு 10 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாக அதிகரிக்கப்படும்.
இதனை அமல்படுத்த பொருளாதார விவகாரங்களுக்கான துறை அந்நியச் செலாவணி நிர்வாகம் (கடன் அல்லாத அம்சங்கள்) (3-வது திருத்தம்) விதிகள் 2026 அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அரசின் பங்குகளில் வெளிநாட்டு பங்கு முதலீட்டாளர்களின் பங்கேற்பை அதிகரிக்க முழுமையான அணுகல் பாதையின் கீழ், குறிப்பிட்ட பங்குகளின் பட்டியலை விரிவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது. மேலும், 15, 30, 40 ஆண்டுகால அரசு பங்குகளின் புதிய வெளியீட்டையும் முழுமையான அணுகல் பாதை தகுதி பங்குகளின் காலத்திற்கான தங்க பசுமைப் பத்திரங்கள் வெளியீட்டையும் சேர்த்துள்ளது.
அரசின் பங்குகளில் வெளிநாட்டு பங்கு முதலீடுகள் மூலம் பெறப்படும் வட்டி மற்றும் முதலீட்டு லாபத்திற்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது 01.04.2026 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதே போன்ற விதிவிலக்கு சர்வதேச தீர்வுகளுக்கான வங்கிக்கும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2269169®=3&lang=1
***
SS/SMB/KPG/KR
(रिलीज़ आईडी: 2269260)
आगंतुक पटल : 12