புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2026க்குள் 75 லட்சம் வீடுகளில் சூரிய சக்தி மின்சாரம்: மத்திய அமைச்சர் திரு. பிரகலாத் ஜோஷி உறுதி!

प्रविष्टि तिथि: 04 JUN 2026 6:13PM by PIB Chennai

பிரதமரின் சூரிய இல்ல இலவச மின்சாரத்  திட்டத்தின் கீழ், வரும் டிசம்பர் 2026-க்குள் 75 லட்சம் வீடுகளில் சூரிய சக்தி மின் உற்பத்தி உள்கட்டமைப்பை  நிறுவ இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு. பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

 

இத்திட்டத்தின் இரண்டு ஆண்டு நிறைவு விழாவில் பேசிய அவர், இத்திட்டம் தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் ஏற்கனவே 40 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர். முன்பு 1 லட்சம் வீடுகளை இத்திட்டத்தில் இணைக்க 118 நாட்கள் தேவைப்பட்ட நிலையில், தற்போது தொழில்நுட்ப மேம்பாட்டினால் வெறும் 8 நாட்களுக்கும் குறைவான காலமே தேவைப்படுகிறது. குறிப்பாக, கடந்த மே 2026-ல் மட்டும் ஒரே மாதத்தில் சாதனை அளவாக 3.16 லட்சம் வீடுகளில் சூரிய தகடுகள் நிறுவப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 17 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் 'பூஜ்ஜிய'  மின் கட்டணப் பலனைப் பெற்று, தங்களது குடும்பப் பொருளாதாரத்தில் நேரடிச் சேமிப்பை அடைந்துள்ளனர்.

 

இதுவரை இத்திட்டத்திற்காக ரூ. 22,750 கோடிக்கும் மேல் மானியம் தங்குதடையின்றி வழங்கப்பட்டுள்ளது. மேற்கு ஆசிய நெருக்கடியால் உலகளவில் எரிசக்தி தட்டுப்பாடு நிலவும் இவ்வேளையில், இத்திட்டம் இந்தியாவின் ஆற்றல் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், வரும் 2047-க்குள் நாட்டின் அனைத்து வீடுகளிலும் சூரிய ஒளி மின்சாரம் பயன்பாட்டிற்கு வரும் என்றும், இதன் பராமரிப்புப் பணிகள் மூலம் ஆண்டுக்கு 3.3 லட்சத்திற்கும் அதிகமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த விழாவில் திட்டத்திற்கான புதிய இலட்சினை மற்றும் வாட்ஸ்அப் பாட் சேவைகளும்  அறிமுகப்படுத்தப்பட்டன.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268992&reg=3&lang=1

செய்தி அடையாள எண்:2268992

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2269089) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Kannada