மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

தேர்வு நடைமுறைகளை வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் வகையில் முகசரிபார்ப்பு நெறிமுறையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் உருவாக்கியுள்ளது

प्रविष्टि तिथि: 04 JUN 2026 3:51PM by PIB Chennai

குடிமைப்பணித் தேர்வுகளில், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் ஆள்மாறாட்டத்தைத் தடுக்கவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக மததிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் நடத்திய 2026-ம் ஆண்டுக்கான குடிமைப் பணி, முதன்மை தேர்வின் போது முக சரிபார்ப்பு நெறிமுறையை சிறப்பாக செயல்படுத்தியது. இந்தத் தேர்வுக்காக  விண்ணப்பப் படிவத்தை நிரப்பும் போது, பதிவேற்றம் செய்யப்பட்ட தேர்வாளரின் புகைப்படத்துடன் தேர்வு மையத்திற்கு அனுமதி சீட்டுடன் தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரரின் அடையாளத்தை இந்த முகசரிபார்ப்பு நெறிமுறை உறுதி செய்கிறது. இந்த அமைப்பு  தேர்வு மையங்களில் கண்காணிப்பாளர்களால் மொபைல் செயலி வாயிலாக சரிபார்க்கப்பட்டு அடையாள சரிபார்ப்பை உறுதி செய்வதன் மூலம் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகளைத் தடுக்க உதவுகிறது.

இந்த ஆண்டு நடைபெற்ற குடிமைப்பணி முதன்மைத் தேர்வுகளின் போது நாடு முழுவதும் உள்ள 2,072 தேர்வு மையங்களில் இந்த முக சரிபார்ப்பு நெறிமுறை கடைபிடிக்கப்பட்டது. இதற்கான மொபைல் செயலி மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய மின் ஆளுமைப் பிரிவின் தொழில்நுட்ப உதவியுடன் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களில் தேர்வர்களை அறைக்குள் அனுமதிப்பதற்கு முன்பு முக சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று நடைமுறையை யுபிஎஸ்சி உருவாக்கியுள்ளது.

இதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளையும் அந்த அமைப்பு வகுத்துள்ளது. இந்த நடைமுறை அனைத்து மாநிலங்கள், மாவட்டங்கள், தேர்வு நடத்தப்பட உள்ள அனைத்து தேர்வு மையங்களுக்கும் பகிரப்பட்டுள்ளது. தேர்வு மைய கண்காணிப்பாளர்களுக்கு பல்வேறு சுற்றுகளாக இதற்கான பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268879&reg=3&lang=1

****

TV/SV/KPG/SH

 


(रिलीज़ आईडी: 2269033) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam