இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இணையவழி வினாடி-வினா போட்டியில் கின்னஸ் உலக சாதனை படைத்த 'மை பாரத்' தளம்

प्रविष्टि तिथि: 04 JUN 2026 2:33PM by PIB Chennai

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எனது இளைய பாரதம் (மை பாரத்) தளம் நடத்திய இணையவழி வினாடி-வினா போட்டியில், ஒரே வாரத்தில் உலகிலேயே அதிகளவிலான பயனர்கள் பங்கேற்றதற்கான கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது. இந்த வினாடி-வினா போட்டியை 3,90,812 பங்கேற்பாளர்கள் வெற்றிகரமாக நிறைவு செய்ததைத் தொடர்ந்து இந்த உலக சாதனை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. புதுதில்லியில் நடைபெற்ற விழாவில், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் கட்சே மற்றும் துறைச் செயலாளர் ஆகியோர் முன்னிலையில் இதற்கான கின்னஸ் சான்றிதழ் முறைப்படி வழங்கப்பட்டது.

‘வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இளம் தலைவர்கள் கலந்துரையாடல்' வினாடி-வினா போட்டியின் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. நாட்டின் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 50 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இச்சாதனை தேசத்தின் ஒட்டுமொத்த இளைஞர்களுக்கும், 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அவர்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268826&reg=3&lang=1

****

TV/PD/SH

 


(रिलीज़ आईडी: 2269020) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , English , Gujarati , Urdu , Marathi , हिन्दी , Telugu , Kannada , Malayalam