வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
உலக அளவில் முதலீடுகளுக்கு உகந்த நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது – மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்
प्रविष्टि तिथि:
04 JUN 2026 1:21PM by PIB Chennai
உலக அளவில் முதலீடுகளுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்வதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற மாநாட்டில் காணொலி மூலம் உரையாற்றிய அவர், உற்பத்திக்கான கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், எளிதாக தொழில் செய்வதை உறுதி செய்தல், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகரித்தல், சர்வதேச அளவிலான வர்த்தக நடவடிக்கைகள் போன்ற பல்வேறு அம்சங்களில் மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.
உலக அளவில் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், பொருளாதாரத்தில் விரைவான வளர்ச்சிக் கண்டு வரும் நாடாக இந்தியா அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் அடுத்த 20 ஆண்டுகளுக்கு இதே நிலை நீடிக்கும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார்.
மாறிவரும் புவிசார் அரசியல் சூழல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற நிலையில், வர்த்தக உத்திகளை மறுசீரமைப்பதன் மூலம் நெருக்கடிகளை இந்தியா தொடர்ந்து வாய்ப்புகளாக மாற்றி வருவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார். உற்பத்தி, வர்த்தகம், முதலீடு ஆகிய துறைகளில் உலக நாடுகளின் கவனத்தை இந்தியா வெகுவாக ஈர்த்து வருவதாக அவர் குறிப்பிட்டார். கனடா, அமெரிக்கா நாடுகளில் உள்ள முதலீட்டாளர்கள், வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுடனான, சந்திப்புகள் மூலம் நாட்டின் பொருளாதார வாய்ப்புகள் மீதான உலக நாடுகளின் நம்பிக்கை அதிகரித்து வருவதைக் காண முடிந்ததாக அமைச்சர் கூறினார். இந்தியா – கனடா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், ஓய்வூதிய காப்பீடு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீட்டாளர்கள் இடையே ஆர்வம் அதிகரித்து வருவதாகவும் திரு பியூஷ் கோயல் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268808®=3&lang=1
****
TV/SV/KPG/SH
(रिलीज़ आईडी: 2269001)
आगंतुक पटल : 13