பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் முத்ரா திட்டத்தின் 11-ம் ஆண்டு வெற்றிக்குப் பிரதமர் பாராட்டு

प्रविष्टि तिथि: 08 APR 2026 9:25AM by PIB Chennai

பிரதமரின் முத்ரா திட்டம் சரியாக 11 ஆண்டுகளுக்கு முன்பு, தொடங்கப்பட்டதை இன்று குறிப்பிட்டுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இது இளைஞர்களின் சுய வேலைவாய்ப்புக்கு மிகவும் உதவிகரமாக இருந்ததை நிரூபித்துள்ளதாக கூறியுள்ளார்.

இத்திட்டத்தின் வெற்றி குறித்து விவரித்துள்ள பிரதமர், தனி நபருக்கு சரியான வாய்ப்புகளை அளிக்கும் போது, அவர் தற்சார்புடையதாக திகழ்வதோடு மட்டுமின்றி, நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிப்பதாக தெரிவித்துள்ளார். இச்சூழலில் விவேகமுள்ள தனிநபரின் பண்புகளைச் சிறப்பிக்கும் ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தை திரு மோடி பகிர்ந்துள்ளார்.

தன் திறன்களை முழுமையாக உணர்ந்தவரும், தற்சார்புடையவரும், நற்செயல்களை ஆற்றுவதில் உறுதியுடன் இருப்பவரும், இடர்பாடுகளைப் பொறுமையுடன் தாங்கிக்கொள்பவரும், எப்போதும் அறநெறியைப் பின்பற்றுபவரும், பேராசையால் தன் பாதையிலிருந்து திசைதிரும்பாதவரே உண்மையான 'ஞானி' என்று அழைக்கப்படுகிறார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2249914&reg=3&lang=1

***

(Release ID: 2249914)

SS/IR/RJ/KPG


(रिलीज़ आईडी: 2268892) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , Bengali-TR , Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada