ரெயில்வே அமைச்சகம்
மும்பை –அகமதாபாத் அதிவிரைவு ரயில் திட்டத்திற்காக மகாராஷ்டிராவில் 3-வது மலை சுரங்கபாதை அமைக்கும் பணி வெற்றிகரமாக நிறைவு
இடுகை இடப்பட்ட நாள்:
02 JUN 2026 3:58PM by PIB Chennai
மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்காக மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டம தஹானு தாலுக்காவில் உள்ள அம்பேசாரி கிராமத்தில் 3-வது மலை சுரங்கப்பாதை அமைக்கும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இச்சாதனை மூலம் 5 மாதங்களுக்குள் மகாராஷ்டிராவில் 3 மலை சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளன. இது இந்தியாவின் முதலாவது அதிவிரைவு ரயில் வழித்தடத்தின் தொழில்நுட்ப ரீதியாக சவாலான பகுதியில் ஏற்பட்டுள்ள விரைவான முன்னேற்றத்தை இது பிரதிபலிக்கிறது.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள எம்டி-07 மலை சுரங்கப்பாதையானது 417 மீட்டர் நீளமும் 14.4 மீட்டர் அகலமும் கொண்டதாகும். இது புல்லட் ரயில் வழித்தடத்தின் ஏறுவது மற்றும் இறங்குவது ஆகிய இருவழிப்பாதைகளையும் உள்ளடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு பகுதிகளிலிருந்தும் துளையிடுதல், வெடிக்க வைத்தல் ஆகிய முறை மூலம் இந்த சுரங்கப்பாதை தோண்டப்பட்டது.
முதலாவது மலை சுரங்கப்பாதையான எம்டி-05 பால்கர் மாவட்டத்தின் சஃபாலே அருகே ஒன்றரை கிமீ தொலைவு உடையதாகும். இது 2026 ஜனவரி 2 அன்று நிறைவு செய்யப்பட்டது.
2-வது மலை சுரங்கப்பாதையான எம்டி-06 454 மீட்டர் நீளமுடையதாகும். இது ஆஸ்திரிய சுரங்கப்பாதை முறை மூலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அதிவிரைவு ரயில் உள்கட்டமைப்பின் இந்தியாவின் திறன்களை வலுப்படுத்துவதோடு பாதுகாப்பான நவீன மற்றும் எதிர்காலத்திற்கான ரயில் போக்குவரத்திற்கு அடித்தளம் இடுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267962®=3&lang=1
****
TV/IR/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2268142)
வருகையாளர் எண்ணிக்கை : 8