தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரசார் பாரதியின் வேவ்ஸ் ஓடிடி தளம் 1 கோடி பயனர்களைக் கடந்து சாதனை

இடுகை இடப்பட்ட நாள்: 02 JUN 2026 6:52PM by PIB Chennai

பிரசார் பாரதியின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளமான ‘வேவ்ஸ்’ , 2024 நவம்பரில் தொடங்கப்பட்ட இரண்டாண்டுகளுக்குள் 1 கோடி பதிவு செய்யப்பட்ட பயனர்களைக் கடந்து வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. இது இந்தியாவின் பொது டிஜிட்டல் ஊடக அமைப்பில் ஏற்பட்டுள்ள முக்கிய வளர்ச்சியைக் காட்டுகிறது.

 

தற்போது இத்தளத்தில் பொழுதுபோக்கு, செய்திகள், கல்வி, கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் பொதுச் சேவை சார்ந்த 24,000-க்கும் மேற்பட்ட படைப்புகளும், 15,000 மணிநேரத்திற்கும் அதிகமான உள்ளடக்கங்களும் உள்ளன. 140-க்கும் மேற்பட்ட நேரலை தொலைக்காட்சி சேனல்கள், 200-க்கும் மேற்பட்ட வானொலிச் சேவைகள், 'பிஎம் இ-வித்யா'  கல்விச் சேனல்கள், மற்றும் யோஜனா, குருக்ஷேத்ரா, வேலைவாய்ப்புச் செய்திகள் ஆகியவற்றின் டிஜிட்டல் பதிப்புகள் இதில் இலவசமாகக் கிடைக்கின்றன.

 

கைப்பேசி, இணையம் மற்றும் ஸ்மார்ட் டிவி என அனைத்துச் சாதனங்களிலும் கிடைக்கக்கூடிய இந்த ஓடிடி தளம், தற்போது 130-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள உலகளாவிய நேயர்களைச் சென்றடைந்துள்ளது. 1.4 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்களுடன் வேகமாக வளர்ந்து வரும் 'வேவ்ஸ்' தளம், 2027 மார்ச் மாதத்திற்குள் 2 கோடி பயனர்களை எட்டுவதை அடுத்தகட்ட இலக்காகக் கொண்டுள்ளது.

(Release ID: 2268091)

 

****

TV/EA/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2268133) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: Kannada , Khasi , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Malayalam