பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சுய கணக்கெடுப்பை நிறைவு செய்த பிரதமர், தங்களின் வீட்டு விவரங்களைச் சுயமாக பதிவு செய்து மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பங்கேற்குமாறு குடிமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்

प्रविष्टि तिथि: 01 APR 2026 8:12PM by PIB Chennai

வீடுகள் பட்டியலிடுதல், வீட்டு வசதி தொடர்பான மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 முதல்கட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், தமது சுய கணக்கெடுப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நிறைவு செய்தார். மக்கள் தொகை கணக்கெடுப்பில்  முதல்முறையாக டிஜிட்டல் முறையில் தரவுகள் சேகரிக்கப்படுவதாக திரு மோடி கூறியுள்ளார். தங்களின் வீட்டு விவரங்கள் குறித்த உயர் கணக்கெடுப்பில் இந்திய மக்களுக்கு இந்த நடைமுறை அதிகாரம் அளிக்கிறது.

வீட்டு விவரங்களை தாங்களாகவே முன்வந்து தெரிவிக்கவும், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைமுறையில் பங்கேற்கவும் இந்திய மக்களுக்கு திரு மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;

“எனது சுய கணக்கெடுப்பை நிறைவு செய்துள்ளேன்.

வீடுகள் பட்டியலிடுதல், வீட்டு வசதி தொடர்பான மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதல்கட்டம் தொடங்கியிருப்பதை இன்றைய தினம் குறிக்கிறது. மக்கள் தொகை கணக்கடுப்பில் முதல் முறையாக டிஜிட்டல் மூலம் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. தங்களின் வீட்டு விவரங்கள் குறித்த உயர் கணக்கெடுப்பில் இந்திய மக்களுக்கு இந்த நடைமுறை அதிகாரம் அளிக்கிறது.

வீட்டு விவரங்களை தாங்களாகவே முன்வந்து தெரிவிக்கவும், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைமுறையில் பங்கேற்கவும் இந்திய மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.”

***

SS/SMB/LDN/SE


(रिलीज़ आईडी: 2267984) आगंतुक पटल : 22
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada