பிரதமர் அலுவலகம்
குஜராத் மாநிலம் சனந்தில் கெய்ன்ஸ் செமிகண்டக்டர் ஆலையை பிரதமர் திறந்து வைத்தார்
प्रविष्टि तिथि:
31 MAR 2026 3:31PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, குஜராத்தின் சனந்தில் உள்ள கெய்ன்ஸ் டெக்னாலஜி செமிகண்டக்டர் ஆலையைத் திறந்து வைத்தார். இதன் மூலம் அவ்வாலையில் உற்பத்தி தொடங்கியது. மைக்ரான் ஆலையின் உற்பத்தித் தொடக்கத்திற்காக பிப்ரவரி 28 அன்று சனந்தில் தான் இருந்ததாகவும், சரியாக ஒரு மாதம் கழித்து கெய்ன்ஸ் ஆலையின் இந்த மைல்கல் நிகழ்விற்காக மீண்டும் வந்திருப்பதாகவும் குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் செமிகண்டக்டர் பயணத்தின் வேகத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். "இது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல, இந்தியாவின் செமிகண்டக்டர் சூழலியல் எந்த வேகத்தில் வளர்ந்து வருகிறது என்பதற்கு இதுவே சான்று," என்று திரு மோடி குறிப்பிட்டார்.
இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் நுண்ணறிவு ஆற்றல் தொகுதிகளின் உத்திசார் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், அவை இந்தியாவிலும் உலக அளவிலும் மின்சார வாகனச் சூழலமைப்பையும் கனரகத் தொழில்துறையையும் வலுப்படுத்தும் என்று குறிப்பிட்டார். இத்தகைய உலகளாவிய கூட்டாண்மைகளே உலகின் சிறந்த எதிர்காலத்திற்கான அடித்தளம் என அவர் விவரித்தார்.
பெருந்தொற்று முதல் புவிசார் அரசியல் மோதல்கள் வரை, நடப்பு தசாப்தம் கொண்டு வந்துள்ள சவால்களைப் பற்றிப் பேசிய பிரதமர், உலகளாவிய விநியோகச் சங்கிலிகள், குறிப்பாக சிப்கள், அரிய வகை கனிமங்கள் மற்றும் எரிசக்தி ஆகியவை மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளன என்று குறிப்பிட்டார். இந்த விநியோகச் சங்கிலிகளில் ஏற்படும் இடையூறுகள் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் முன்னேற்றத்தையும் தடுக்கின்றன என்பதை வலியுறுத்திய திரு மோடி, "இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாடு இந்தத் திசையில் முன்னேறுவது, ஒட்டுமொத்த உலகின் வளர்ச்சிக்கும் இன்றியமையாதது" என்று குறிப்பிட்டார்.
தொழில்துறை மதிப்பீடுகளை மேற்கோள் காட்டி, இந்தியாவின் செமிகண்டக்டர் சந்தை தற்போது சுமார் 50 பில்லியன் டாலராக உள்ளது என்றும், இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் இது 100 பில்லியன் டாலரைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவின் செமிகண்டக்டர் துறைக்கான உறுதிப்பாட்டில் உலகளாவிய முதலீட்டாளர்களிடையே காணப்படும் பெரும் ஆர்வத்தைக் குறிப்பிட்ட பிரதமர் திரு மோடி, "நமது தேவைகளுக்கான அதிகபட்ச சிப்களை இங்கேயே இந்தியாவில் உற்பத்தி செய்வதே நமது இலக்கு" என்று குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2247278®=3&lang=1
***
TV/RB/KR
(रिलीज़ आईडी: 2267951)
आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam