பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு காந்திநகரில் உள்ள கோபா தீர்த்தத்தில் சாம்ராட் சம்பிரதி அருங்காட்சியகத்‍தைப் பிரதமர் திறந்து வைத்தார்

प्रविष्टि तिथि: 31 MAR 2026 1:07PM by PIB Chennai

பகவான் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, குஜராத்தின் காந்திநகரில் உள்ள கோபா தீர்த்தத்தில் சாம்ராட் சம்பிரதி என்ற சமண பாரம்பரிய அருங்காட்சியகத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார். "கோபா தீர்த்தம், ஆன்மீக அமைதி நிறைந்த இடமாகும். இது பல சமண முனிவர்கள் மற்றும் துறவிகளின் தவம் வெளிப்படும் இடமாகவும், படைப்பும் சேவையும் இயல்பாக மலரும் இடமாகவும் திகழ்கிறது," என்று திரு மோடி கூறினார்.

பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் புதுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், பழங்கால ஞானம் புதிய வழிகளில் வழங்கப்படும்போது, பாரம்பரியம் செழுமையடைவதுடன், எதிர்கால சந்ததியினர் புதிய  உத்வேகத்தையும் பெறுகிறார்கள் என்றார். "சாம்ராட் சம்பிரதி அருங்காட்சியகம் இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களுக்குச் சொந்தமானதாக இருப்பதுடன், நமது புகழ்பெற்ற கடந்த காலத்திற்கு ஒரு சான்றாகவும் விளங்குகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.

 

இந்தியாவின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், அதன் ஏழு காட்சியகங்கள் நாட்டின் பன்முகத்தன்மையையும் கலாச்சார வளத்தையும் பறைசாற்றுகின்றன என்றும் பிரதமர் குறிப்பிட்டார். சமண மரபுடன், வேதம், பௌத்தம் மற்றும் பிற இந்திய மத மரபுகளையும் இந்த அருங்காட்சியகம் சிறப்பாகப் பிரதிபலிக்கிறது என்று சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தியாவின் மிகப்பெரிய பலமான அதன் பன்முகத்தன்மை மற்றும் பன்முகத்தன்மையில் உள்ள ஒற்றுமையை எடுத்துரைத்தார். மதம் மற்றும் பிரிவுகளின் பெயரால் உலகம் மோதல்களைக் கண்டிருக்கும் வேளையில், இந்த அருங்காட்சியகம் வேதங்கள், புராணங்கள், ஆயுர்வேதம், யோகா மற்றும் தர்சனம் என அனைத்து மரபுகளையும் ஒரு வானவில் போல இணக்கமாக அருகருகே முன்வைக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். "இது இந்தியாவில் மட்டுமே சாத்தியமாகும்," என்று அவர் தெரிவித்தார்.

எதிர்காலம் மீது நம்பிக்கை தெரிவித்த பிரதமர், நாட்டின் பெரும் இலக்குகளை அடைவதில் இந்தியாவின் ஒற்றுமையும் கலாச்சார வலிமையுமே உந்து சக்தியாக விளங்கும் என்று கூறினார். மக்கள் தனிப்பட்ட ஆசைகளைக் கடந்து, சமூகம் மற்றும் தேசத்தின் இலக்குகளுக்காக உழைக்கும்போது, வளர்ச்சியின் வேகம் அதிகரிக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2247208&reg=3&lang=1  

***

TV/RB/KR


(रिलीज़ आईडी: 2267948) आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam