பிரதமர் அலுவலகம்
சுரினாம் நாட்டின் முன்னாள் அதிபர் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
31 MAR 2026 11:01AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, சுரினாம் நாட்டின் முன்னாள் அதிபர் திரு சந்திரிகாபெர்சாத் சந்தோகி-யின் திடீர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது சுரினாமிற்கு மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள இந்திய சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று பிரதமர் கூறியுள்ளார். மறைந்த தலைவருடன் தாம் நடத்திய பல சந்திப்புகளை திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார். சுரினாமிற்காக சந்தோகி ஆற்றிய அயராத சேவையும், இந்தியா-சுரினாம் உறவுகளை வலுப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளும் அவருடனான தமது உரையாடல்களில் தெளிவாகப் பிரதிபலித்தன என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். சந்தோகி-க்கு இந்திய கலாச்சாரத்தின் மீது இருந்த சிறப்புப் பற்றையும் பிரதமர் எடுத்துரைத்துள்ளார். சமஸ்கிருதத்தில் அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டபோது பலரின் இதயங்களை வென்றார் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"எனது நண்பரும், சுரினாமின் முன்னாள் அதிபருமான திரு சந்திரிகாபெர்சாத் சந்தோகி-யின் திடீர் மறைவுச் செய்தியால் மிகுந்த அதிர்ச்சியும் துயரமும் அடைந்துள்ளேன். இது சுரினாமிற்கு மட்டுமல்லாமல், உலகளாவிய இந்திய சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
அவருடனான எனது பல சந்திப்புகளை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன். சுரினாமிற்கான அவரது அயராத சேவையும், இந்தியா-சுரினாம் உறவுகளை வலுப்படுத்துவதில் அவர் மேற்கொண்ட முயற்சிகளும் எங்கள் உரையாடல்களில் தெளிவாகப் பிரதிபலித்தன. அவருக்கு இந்தியக் கலாச்சாரத்தின் மீது ஒரு தனிப் பிரியம் இருந்தது. அவர் சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டபோது பலரின் இதயங்களைக் கவர்ந்தார்.
இந்த சோகமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் சுரினாம் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி."
***
(Release ID: 2247168)
TV/PLM/KR
(रिलीज़ आईडी: 2267944)
आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam