பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பகவான் மகாவீர் ஜென்ம கல்யாணக் விழாவையொட்டிப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 31 MAR 2026 10:34AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, பகவான் மகாவீரரின் ஜன்ம கல்யாணக் (மகாவீர் ஜெயந்தி) புனித நன்னாளில் மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பகவான் மகாவீரரின் வாழ்க்கையும் போதனைகளும் சத்தியம், அகிம்சை, கருணை ஆகியவற்றின் பாதையைத் தொடர்ந்து ஒளிரச் செய்கின்றன என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். அவருடைய கொள்கைகள் ஆன்மீக ரீதியாக எழுச்சியூட்டுபவையாகவும், இன்றைய உலகிற்கு மிகவும் பொருத்தமானவையாகவும் உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார். சமத்துவம், கருணை ஆகியவற்றுக்கு அவர் அளித்த முக்கியத்துவம், சமூகத்தின் மீதான நமது கூட்டுப் பொறுப்பை நமக்கு நினைவூட்டுகிறது என்று பிரதமர் கூறியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"பகவான் மகாவீரரின் ஜன்ம கல்யாணக் நல்வாழ்த்துகள். பகவான் மகாவீரரின் வாழ்க்கையும் போதனைகளும் சத்தியம், அகிம்சை, கருணை ஆகியவற்றின் பாதையைத் தொடர்ந்து ஒளிரச் செய்கின்றன. அவருடைய கொள்கைகள் ஆன்மீக ரீதியாக எழுச்சியூட்டுபவையாகவும், இன்றைய உலகிற்கு மிகவும் பொருத்தமானவையாகவும் உள்ளன. சமத்துவம், கருணை ஆகியவற்றுக்கு அவர் அளித்த முக்கியத்துவம், சமூகத்தின் மீதான நமது கூட்டுப் பொறுப்பை நமக்கு நினைவூட்டுகிறது."

***

(Release ID: 2247165)

TV/PLM/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2267941) வருகையாளர் எண்ணிக்கை : 26