பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி நெதர்லாந்து பிரதமருடன் பேச்சு நடத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 30 MAR 2026 9:34PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டனுடன் தொலைபேசியில் பேச்சு நடத்தினார். அப்போது இந்தியா-நெதர்லாந்து உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தாக திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். செமி கண்டக்டர், மாபெரும் நீர் திட்டங்கள், பசுமை ஹைட்ரஜன், வல்லுநர்கள் பரிமாற்றம் போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்ததாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மையை விரைவில் மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை திரு நரேந்திர மோடி அப்போது வலியுறுத்தினார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

 

"நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டனுடன் உரையாடியதில் மகிழ்ச்சி. இந்தியா-நெதர்லாந்து உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்.

செமி கண்டக்டர்கள், மாபெரும் நீர் திட்டங்கள், பசுமை ஹைட்ரஜன், திறன் வாய்ந்த வல்லுநர்கள் பரிமாற்றம் போன்றவற்றில் இரு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் ஆலோசித்தோம்.

மேற்கு ஆசியாவின் நிலைமை குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டோம். அப்பகுதியில் அமைதியையும் நிலைத்தன்மையையும் விரைவில் மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினோம்."

***

(Release ID: 2247115)

TV/PLM/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2267939) வருகையாளர் எண்ணிக்கை : 19