பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான மாண்புமிகு இளவரசர் முகமது பின் சல்மானுடன் பிரதமர் உரையாடினார்

प्रविष्टि तिथि: 28 MAR 2026 9:17PM by PIB Chennai

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான மாண்புமிகு இளவரசர் முகமது பின் சல்மானுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார். மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மோதல் குறித்து இருவரும் விவாதித்தனர். பிராந்திய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை இந்தியா கண்டிப்பதையும், கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரத்தை உறுதிசெய்து, கப்பல் வழித்தடங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் திரு மோடி மீண்டும் வலியுறுத்தினார். "சவுதி அரேபியாவில் உள்ள இந்திய சமூகத்தின் நலனுக்காக அவர் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தேன்," என்று திரு மோடி குறிப்பிட்டார்.

இந்த உரையாடல் பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் குறிப்பிட்டதாவது:

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான மாண்புமிகு இளவரசர் முகமது பின் சல்மான் அவர்களுடன், மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மோதல் குறித்துப் பேசினேன்.

பிராந்திய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை இந்தியா கண்டிப்பதை மீண்டும் வலியுறுத்தினேன்.

கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை உறுதி செய்வதற்கும், கப்பல் வழித்தடங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்குமான அவசியம் குறித்த எங்கள் ஒருமித்த கருத்தை  நாங்கள் பகிர்ந்து கொண்டோம்.

சவுதி அரேபியாவில் உள்ள இந்திய சமூகத்தின் நலனுக்குத் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன்.

***

(Release ID: 2246580)

TV/RB/KR

 


(रिलीज़ आईडी: 2267919) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam