பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் 2026-ல் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய மல்யுத்த வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 28 MAY 2026 8:10PM by PIB Chennai

வியட்நாமின் டா நாங் நகரில் நடைபெற்ற 23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் 2026-ல் இந்திய மல்யுத்த வீரர்கள் வெளிப்படுத்திய சிறப்பான செயல்பாட்டிற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவின் ஆடவர் ஃப்ரீஸ்டைல், பெண்கள் மல்யுத்த அணிகள் குழுப் பட்டங்களை வென்றதாக திரு மோடி கூறினார்.

ஆடவர் ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்த அணி, 4 தங்கப் பதக்கங்கள் உட்பட 9 பதக்கங்களை வென்றதன் மூலம், 23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளின் வரலாற்றில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு அதிக ஒட்டுமொத்த பதக்கங்களை வென்றுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும், மகளிர் மல்யுத்த அணி 6 தங்கப் பதக்கங்கள் உட்பட 10 பதக்கங்களை வென்றுள்ளது என்றும் அவர் கூறினார்.

கிரேக்கோ-ரோமன் அணி 8 பதக்கங்களுடன், இதுவரையிலான தங்களின் அதிகபட்ச ஒட்டுமொத்தப் பதக்க எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

மல்யுத்த வீரர்களைப் பாராட்டிய பிரதமர், அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்குத் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:

நமது மல்யுத்த வீரர்களின் மிகச்சிறப்பான செயல்பாடு!

வியட்நாமின் டா நாங்கில் நடைபெற்ற 23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் 2026-ல் , நமது ஆடவர் ஃப்ரீஸ்டைல், பெண்கள் மல்யுத்த அணிகள் குழுப் பட்டங்களை வென்றன.

ஆடவர் ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்த அணி 4 தங்கம் உட்பட 9 பதக்கங்களை வென்றதன் மூலம், 23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பதக்கங்களை வென்று  சாதனை படைத்துள்ளது. மகளிர் மல்யுத்த அணி 6 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்றது. கிரேக்கோ-ரோமன் அணியும் 8 பதக்கங்களுடன், இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளது.

நமது மல்யுத்த வீரர்களுக்குப் பாராட்டுகள். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்.”

(Release ID: 2266397)

***

SS/BR/KR


(रिलीज़ आईडी: 2267810) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Malayalam , Marathi , Bengali , Assamese , Odia , English , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Kannada