பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியா - ஓமன் இடையேயான விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தின் நன்மைகள் குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 01 JUN 2026 12:52PM by PIB Chennai

மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் எழுதியுள்ள சிறப்புக் கட்டுரை ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.

இந்தியா - ஓமன் இடையேயான விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம்இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு தங்களது சந்தைகளைப் பன்முகப்படுத்தவும்வேலைவாய்ப்பு உருவாக்கத்தை அதிகரிக்கவும்விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கவும், இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பரம் செழிப்பை வளர்க்கவும் எவ்வாறு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது என்பதை இந்தக் கட்டுரை விரிவாக விளக்குகிறது. மேலும்வளர்ந்த நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக அரசு எடுத்து வரும் முயற்சிகள்ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த எவ்வாறு உதவுகின்றன என்பதையும் இக்கட்டுரை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இது குறித்து பிரதமர் அலுவலகம் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:

"மத்திய அமைச்சர் திரு பியுஷ் கோயல்  எழுதியுள்ள இக்கட்டுரையானதுஇந்தியா - ஓமன் இடையேயான விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம்இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு சந்தைகளைப் பன்முகப்படுத்தவும்வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவிக்கவும்விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கவும், இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பரம் செழிப்பை வளர்க்கவும் எவ்வாறு நல்வாய்ப்புகளை வழங்குகிறது என்பதை விளக்குகிறது.

வளர்ந்த நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக அரசு எடுத்து வரும் முயற்சிகள்ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கையையும் மேம்படுத்த உதவுகிறது என்பதையும் அவர் இதில் வலியுறுத்தியுள்ளார்."

***

(Release ID: 2267419)
SS/EA/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2267732) வருகையாளர் எண்ணிக்கை : 56