மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
உலக புகையிலை ஒழிப்பு தினம்: "புகையிலையில்லா தலைமுறையை நோக்கி - பள்ளிகளுக்கான போட்டி 2025" வெற்றியாளர்களுக்கு கல்வி அமைச்சகம் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
01 JUN 2026 2:32PM by PIB Chennai
உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மத்திய பள்ளிக் கல்வி, எழுத்தறிவுத் துறை மே 29, 2026 அன்று புதுதில்லியில் தேசிய அளவிலான கூட்டத்தை நடத்தியது. இதில், "புகையிலையில்லா தலைமுறையை நோக்கி: பள்ளிகளுக்கான போட்டி 2025" என்ற விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் வெற்றி பெற்ற பள்ளிகளுக்குத் துறை செயலாளர் திரு சஞ்சய் குமார் விருதுகளை வழங்கிப் பாராட்டினார்.
நாடெங்கிலும் இருந்து 17,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்ற நிலையில், சிறந்த 12 பள்ளிகளுக்குக் கோப்பைகளுடன் முறையே ரூ.50,000, ரூ.25,000, ரூ.15,000 என ரொக்கப் பரிசுகளும், 41 பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாணவர்களிடையே புகையிலை, போதைப் பழக்கத்தின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய செயலாளர், 'போதைப்பொருள் இல்லா பாரதம்' திட்டத்தின் கீழ் துறையின் மூன்றாண்டு செயல் திட்டத்தையும் (2026–2029) மற்றும் 'நஷா முக்த் வித்யாலயா' வலைத்தளத்தையும் தொடங்கி வைத்தார்.
கல்வி நிறுவனங்களைச் சுற்றி 500 மீட்டர் தூரத்திற்குப் போதைப்பொருள் இல்லா மண்டலத்தை உருவாக்குவது, பாடத்திட்டங்களில் விழிப்புணர்வைச் சேர்ப்பது உள்ளிட்டவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். மேலும், புகையிலைக் கட்டுப்பாட்டிற்கான அரசின் கடுமையான சட்டங்கள் மற்றும் 2024 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட புகையிலையில்லா கல்வி நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்கள் குறித்துப் பொருளாதார ஆலோசகர் திருமதி ஏ ஸ்ரீஜா எடுத்துரைத்தார். ஆரோக்கியமான, போதையில்லா கல்விச் சூழலை உருவாக்குவதில் ஆசிரியர்கள், பள்ளிகள், குடும்பங்களின் கூட்டுப் பங்களிப்பு மிகவும் அவசியம் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
***
(Release ID: 2267467)
SS/SE/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2267720)
வருகையாளர் எண்ணிக்கை : 8