ஆயுஷ்
azadi ka amrit mahotsav

12-வது சர்வதேச யோகா தினக் கருப்பொருள்: ‘ஆரோக்கியமான முதுமைக்கு யோகா’

இடுகை இடப்பட்ட நாள்: 01 JUN 2026 5:50PM by PIB Chennai

2026 ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள 12-வது சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருளாகஆரோக்கியமான முதுமைக்கு யோகாஎன்பது அறிவிக்கப்பட்டுள்ளது. இது, உடல், மன மற்றும் உணர்வுபூர்வமான நல்வாழ்வை மேம்படுத்தும் முழுமையான அணுகுமுறையாக யோகாவிற்கு உலகளவில் கிடைத்துள்ள அங்கீகாரத்தைப் பிரதிபலிக்கிறது. இது குறித்துப் பேசிய மத்திய ஆயுஷ் மற்றும் சுகாதாரத் துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், "மனிதர்களின் வாழ்நாள் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில், முதுமையைச் சீராகவும் ஆரோக்கியமாகவும் எதிர்கொள்வது அவசியமாகிறது. நமது முனிவர்கள், யோகா மூலம் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பெற்றதை இந்தியாவின் பழமையான நாகரிகம் நமக்கு உணர்த்துகிறது" என்று கூறினார்.

முதுமைக்கால ஆரோக்கியத்தில் யோகாவின் பங்கு குறித்து உலகளாவிய அறிவியல் ஆய்வுகள் கடந்த பத்தாண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளன. 2014-ல் 183 ஆக இருந்த இது தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள் 2025-ல் 1,207 ஆக உயர்ந்துள்ளன. மேலும், மூத்த குடிமக்களுக்கான சேவைகளை உள்ளடக்கியசில்வர் பொருளாதாரம்இந்தியாவில் சுமார் ரூ.73,000 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், செலவு குறைந்த மற்றும் எளிமையான நோய்த்தடுப்பு சுகாதார முறையாக யோகா உருவெடுத்துள்ளது.

முதியோர்களுக்கான சிறப்புப் பயிற்சிகள் அடங்கியதொற்றா நோய்களுக்கான 10 யோகா நெறிமுறைகளைஆயுஷ் அமைச்சகம் உருவாக்கியுள்ளது. மேலும், தினசரி யோகா பயிற்சியை ஊக்குவிக்கும்யோகா 365’ மற்றும் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும்யோகா சமவேஷ்போன்ற முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு சர்வதேச யோகா தினம், ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான முதுமையை ஆதரிக்கும் இந்தியாவின் பாரம்பரியத்தை உலகத்துடன் பகிர்ந்துகொள்ளும் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267598&reg=3&lang=1    

***

TV/SE/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2267706) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: Marathi , English , Urdu , हिन्दी