ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பருத்தி இறக்குமதி மீதான சுங்க வரிக்கு அரசு தற்காலிகமாக விலக்களித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 30 MAY 2026 5:28PM by PIB Chennai

பருத்தி விவசாயிகள் மற்றும் முழு பருத்தி மதிப்புச் சங்கிலியின் நலன்களை முன்னிலைப்படுத்தி, மத்திய அரசு ஜூன் 1 முதல் அக்டோபர் 31, 2026 வரை பருத்தி இறக்குமதியில் தற்காலிகமாக சுங்க வரிகளைத் தள்ளுபடி செய்வதன் மூலம் ஒரு முன்முயற்சியான மற்றும் சமநிலையான அணுகுமுறையைக் கையாண்டுள்ளது.

பருத்தி பருவகாலம் இல்லாத நேரத்தில் செயல்படுத்தப்படும் இந்த நடவடிக்கை, ஜவுளித் தொழிலுக்குப் போதுமான பருத்தி இருப்பை உறுதி செய்யும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு  ஆதரவளிக்கும், உள்ளீட்டுச் செலவுகளைக் குறைக்கும், மேலும், இந்திய ஜவுளிகளின் போட்டித்தன்மையை வலுப்படுத்தும். அதே நேரத்தில் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாத்து சந்தை ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும்.

***

(Release ID: 2267011)

TV/PKV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2267338) வருகையாளர் எண்ணிக்கை : 61
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Malayalam