குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஆர்ட் ஆஃப் லிவிங் அறக்கட்டளையின் 45-வது ஆண்டு கொண்டாட்டங்களில் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 29 MAY 2026 2:30PM by PIB Chennai

குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன்இன்று (29.05.2026) பெங்களூருவில் நடைபெற்ற ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பு அறக்கட்டளையின் 45-வது ஆண்டு விழாவின் உலகளாவிய கொண்டாட்டங்களில் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்உலகம் முழுவதும் அமைதிநல்லிணக்கம்சேவைஆன்மீக விழிப்புணர்வு ஆகிய விழுமியங்களைப் பரப்பி வரும் இந்த அமைப்பை பாராட்டினார்.

இந்த அமைப்புநாடுகள்கண்டங்கள்கலாச்சாரங்கள்தலைமுறைகள் ஆகியவற்றைக் கடந்து பல லட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இவ்வமைப்பின் உலகளாவிய பரவலைப் பாராட்டிய அவர்அதன் மையங்கள் கிட்டத்தட்ட 180 நாடுகளில் உள்ளன என்று குறிப்பிட்டார்.

"உள் அமைதியே நல்லிணக்கத்தின் அடித்தளம்" என்ற கொள்கையின் அடிப்படையில் 45 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இந்த இயக்கம்கருணைமன உறுதிமகிழ்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் ஒரு பெரிய ஆன்மீக சக்தியாக வளர்ந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

பக்தி என்பது தனக்கும்குடும்பத்திற்கும்சமூகத்திற்கும்தேசத்திற்கும்மனிதகுலத்திற்கும் தன்னை அர்ப்பணிப்பதாகும் என்று அவர் கூறினார. ஆன்மீகம் மற்றவர்களுடன் அமைதியாக வாழ மக்களுக்குக் கற்பிக்கிறது என்றும்வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் நிறைவானதாகவும் அது ஆக்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரைப் புகழ்ந்து பேசிய குடியரசு துணைத் தலைவர்மோதல் மற்றும் நிச்சயமற்ற தன்மையால் சூழப்பட்ட உலகில்குருதேவ் ஞானம்விழிப்புணர்வுஅமைதிநல்லிணக்கம் ஆகிய விழுமியங்களுடன் மனிதகுலத்திற்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறார் என்றார். குருதேவின் எளிமைபணிவுகருணை ஆகியவை உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களுக்கு ஊக்கமளித்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் இல்லாத இந்தியா தொடர்பாக, 'ஆர்ட் ஆஃப் லிவிங்அறக்கட்டளையின் பிரச்சாரத்தையும் அவர் பாராட்டினார். இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய மதிப்பை எடுத்துரைத்த குடியரசு துணைத் தலைவர்இந்தியா இப்போது ஒரு தனித்துவமான நம்பிக்கையுடனும்லட்சியங்களுடனும்உலக அளவில் முன்னேறி வருவதாகக் கூறினார். இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியமும் நவீன தலைமைத்துவமும் உலகிற்கு உத்வேகம் அளிக்கின்றன என்று குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கர்நாடக ஆளுநர் திரு தாவர்சந்த் கெலாட்குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்ஆர்ட் ஆஃப் லிவிங் அறக்கட்டளையின் உறுப்பினர்கள்இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள்ஆயிரக்கணக்கான பக்தர்கள்தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266572&reg=3&lang=1  

***

SS/PLM/PD/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2266758) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati , Telugu , Kannada , Malayalam