நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் சட்டபூர்வ எடை அளவியல் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த மண்டல ஆய்வுக் கூட்டத்தை மத்திய நுகர்வோர் விவகாரத் துறை நடத்தியது

இடுகை இடப்பட்ட நாள்: 28 MAY 2026 3:41PM by PIB Chennai

மத்திய நுகர்வோர் விவகாரத் துறை, ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் தொடர்பான உயர்நிலைக் குழு மற்றும் அமைச்சரவைச் செயலகத்தின் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான பரிந்துரைகளுடன், 2026-ம் ஆண்டு மே 27-ம் தேதி ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மாநிலங்களுடன் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டத்தை நடத்தியது. 2009-ம் ஆண்டின் சட்டபூர்வ எடை அளவியல் சட்டத்தின் கீழ், மக்களின் நம்பிக்கை (விதிமுறைகள் திருத்தம்) சட்டம், 2026 மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளின் அலாக்கத்தை ஆய்வு செய்வதே இதன் நோக்கமாகும்.

புதிய பதிவு அடிப்படையிலான கட்டமைப்பைச் செயல்படுத்துதல், சிறு நடைமுறைக் குற்றங்களை குற்றமற்றதாக்குதல் மற்றும் ‘மேம்பாட்டு அறிவிப்புகளைஅறிமுகப்படுத்துதல், அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேர்வு மையங்களை விரிவுபடுத்துதல் மற்றும் சட்டபூர்வ எடை அளவியல் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல் போன்ற அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

உரிமம் வழங்கும் நடைமுறைகளிலிருந்து பதிவு நடைமுறைக்கு மாறுதல் : "உரிமம் வழங்குவதிலிருந்து" "பதிவு நடைமுறைகளுக்கு" மாறும் இந்த நடவடிக்கை, நம்பிக்கை அடிப்படையிலான மற்றும் எளிதாக்கும் ஒழுங்குமுறை அமைப்பை உறுதி செய்யுமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன. தேவையற்ற கால தாமதங்கள் அல்லது முன் ஆய்வுகள் இன்றி, பரிந்துரைக்கப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்தவுடன் பதிவுகள்  வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266230&reg=3&lang=1

***

TV/SV/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2266272) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu , Kannada , Malayalam