மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
நீட் மறுதேர்வு குறித்து மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் ஆய்வு
இடுகை இடப்பட்ட நாள்:
27 MAY 2026 7:57PM by PIB Chennai
ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் மறுதேர்விற்கான தயார்நிலையை மதிப்பிடுவதற்காக, மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் கே. ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்ற உயர்மட்ட ஆய்வுக் குழுக் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது. டாக்டர் கே. ராதாகிருஷ்ணன், தேசிய தேர்வு முகமையின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட உயர் அதிகார வழிகாட்டுதல் குழுவின் தலைவராக உள்ளார்.
இக்கூட்டத்தில் உயர்கல்வித் துறைச் செயலாளர், தேசிய தேர்வு முகமையின் தலைமை இயக்குநர், முகமையின் மூத்த அதிகாரிகள், கல்வி அமைச்சகத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் போது, தேர்வு தொடர்பான கண்காணிப்மை வலுப்படுத்தவும், தேர்வு சீராக நடைபெறுவதை உறுதி செய்யவும் மேற்கொள்ளப்பட்ட கூடுதல் நடவடிக்கைகள் குறித்து தேசிய தேர்வு முகமையின் தலைமை இயக்குநர் விளக்கினார்.
தேர்வு தொடர்பான கண்காணிப்பு தலையாய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வலியுறுத்திய அதேவேளையில், நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் போதுமான வசதிகளையும் மாணவர்களுக்கு உகந்த சூழலையும் உறுதி செய்வதற்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று திரு தர்மேந்திரப் பிரதான் வலியுறுத்தினார்.
இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் மறுதேர்வு, 2026 ஜூன் 21 அன்று, நாடு முழுவதும் 550 நகரங்களில் உள்ள 5400-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266029®=3&lang=2
***
TV/PLM/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2266101)
வருகையாளர் எண்ணிக்கை : 8