நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
சமையல் எண்ணெய்களுக்கான தரப்படுத்தப்பட்ட பாக்கெட் அளவுகளை அறிமுகப்படுத்துவது குறித்து நுகர்வோர் விவகாரங்கள் துறை ஆலோசனை
प्रविष्टि तिथि:
25 MAY 2026 7:04PM by PIB Chennai
சந்தையில் பல்வேறு அளவுகளில் சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதால், நுகர்வோர் விலைகளை ஒப்பிட்டுப் பார்த்து வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. இதற்குத் தீர்வு காணும் வகையில், சட்ட அளவியல் விதிகளின் கீழ் சமையல் எண்ணெய்களுக்குக் குறிப்பிட்ட தரப்படுத்தப்பட்ட பாக்கெட் அளவுகளை அறிமுகப்படுத்துவது குறித்து நுகர்வோர் விவகாரங்கள் துறை பரிசீலித்து வருகிறது.
இது தொடர்பாக, நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளரின் தலைமையில் கடந்த 2026 மே 20 அன்று முக்கியச் சமையல் எண்ணெய் தொழில்துறை கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாட்டின் 90 சதவீத சமையல் எண்ணெய் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு முக்கிய அமைப்புகள் பங்கேற்றன. தற்போது சந்தையில் 650 கிராம், 700 கிராம், 850 கிராம் எனப் பலதரப்பட்ட அளவுகளில் பாக்கெட்டுகள் விற்கப்படுவதால் நுகர்வோர் ஏமாற வாய்ப்புள்ளதாக இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதையடுத்து, சமையல் எண்ணெய்களை 200 மிலி முதல் 20 லிட்டர்/20 கிலோ வரையிலான குறிப்பிட்ட 9 அளவுகளில் மட்டுமே விற்பனை செய்யத் தொழில்துறை கூட்டமைப்புகள் பரிந்துரைத்துள்ளன. பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் உள்ளிட்ட முக்கியச் சமையல் எண்ணெய்களுக்கு இத்தரக் கட்டுப்பாட்டைக் கொண்டு வரவும், உற்பத்தியாளர்களுக்கு 3 மாத கால அவகாசம் வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்கள் ஆகிய இரண்டிற்கும் சமமாகப் பொருந்தும் என நுகர்வோர் விவகாரங்கள் துறை தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265088®=3&lang=1
***
SS/EA/KR
(रिलीज़ आईडी: 2265832)
आगंतुक पटल : 39