ஆயுஷ்
சர்வதேச யோகா தினம் 2026 குறித்த பன்மொழிக் கையேட்டை பொதுமக்கள் பார்வையிடலாம்
இடுகை இடப்பட்ட நாள்:
26 MAY 2026 3:46PM by PIB Chennai
சர்வதேச யோகா தினம் 2026-க்கான ஏற்பாடுகள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் விரைவுபெற்று வரும் சூழலில், ஆயுஷ் அமைச்சகம், பன்மொழிக் கையேட்டை வெளியிட்டுள்ளது. அமைப்பாளர்கள், நிறுவனங்கள், யோகா பயிற்சியாளர்கள், அரசு முகமைகள், கல்வி நிறுவனங்கள், சமூகக் குழுக்கள் ஆகியோருக்கு உதவும் வகையில் இந்தப் பன்மொழிக் கையேடு வெளியிடப்பட்டுள்ளது.
பொது யோகா நெறிமுறைகள், அமைச்சகத்தின் முன்முயற்சிகள், பொதுமக்கள் பங்கேற்புக்கான வாய்ப்புகள் குறித்த முக்கியத் தகவல்களை ஆங்கிலம், இந்தி மற்றும் 21 பிராந்திய மொழிகளில் அறிந்து கொள்ளலாம். யோகா மற்றும் சர்வதேச யோகா தினம் குறித்த நம்பத்தகுந்த தகவல்களை பல்வேறு இந்திய மொழிகளில் கிடைக்கச் செய்வதன் மூலம் இந்த வெளியீடு பல்வேறு தரப்பினரின் அணுகலை மேம்படுத்தவும், பங்கேற்பை ஊக்குவிக்கவும் முயற்சிக்கிறது. யோகா தொடர்புடைய நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யும் கல்வி நிறுவனங்கள், அரசு துறைகள், சமூகக் குழுக்கள் உள்ளிட்டவர்களுக்கு உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2014-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது முதல் சர்வதேச யோகா தினத்தின் பரிணாம வளர்ச்சிக் குறித்து இந்தக் கையேடு விளக்குகிறது. நடப்பாண்டு சர்வதேச யோகா தினத்திற்காக திட்டமிடப்பட்டுள்ள பெரிய முன்முயற்சிகள் குறித்து இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. யோகா சங்கம், ஹரீத் யோகா, யோகா சமவேஷ், யோகா பூங்கா போன்ற ஆயுஷ் அமைச்சகத்தின் திட்டங்கள் குறித்து இதில் விளக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265395®=3&lang=1
***
SS/IR/KPG/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2265594)
வருகையாளர் எண்ணிக்கை : 6