இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
தேசிய விளையாட்டு நிர்வாக வாரிய விதிமுறைகள், தேசிய விளையாட்டு தீர்ப்பாய விதிமுறைகள் 2026-ஐ அரசு வெளியிட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
26 MAY 2026 8:01AM by PIB Chennai
தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம் 2025-ன் விதிமுறைகளின் கீழ், தேசிய விளையாட்டு நிர்வாக வாரிய விதிமுறைகள், தேசிய விளையாட்டு தீர்ப்பாய விதிமுறைகள் 2026-ஐ அரசு வெளியிட்டுள்ளது.
தேசிய விளையாட்டு நிர்வாக (தேசிய விளையாட்டு வாரியம்) விதிமுறைகள் 2026, வாரியம் அமைத்தல், தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம், சம்பளம், படிகள் இதர சேவையின் நிபந்தனைகள், வாரியத்தின் அதிகாரம், பணிகள் ஆகியவை குறித்து விளக்குகிறது.
இந்த விதிமுறைகளின் கீழ், மத்திய அரசு நியமிக்கும் தலைவர், இரண்டு உறுப்பினர்கள், தேசிய விளையாட்டு வாரியத்தில் பணியாற்றுவார்கள்.
தேசிய விளையாட்டு நிர்வாகம் (தேசிய விளையாட்டு தீர்ப்பாயம்) விதிமுறைகள் 2026, தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம், நியமனம், மறுநியமன நடைமுறை, சம்பளம், படிகள், தீர்ப்பாயத்தின் தேவை, நிபந்தனைகள் ஆகியவற்றை விளக்குகிறது.
விதிமுறைகளில் மின்னணு முறைப்படி செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப, சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் அறிவிப்புகள், பதிலுரைகள், ஆவணங்கள், விளக்கங்களை சமர்பிப்பதற்கும், தீர்ப்பாயத்தின் தகவல் தொடர்புகள், உத்தரவுகளை வெளியிடுதல், இணையவழி விசாரணைகள், நடைமுறைகள் தொடர்பான பதிவுகளை வெளியிட மத்திய அரசால் ஒரு இணையதளம் அறிவிக்கப்படுவதும் அடங்கும்.
தேசிய விளையாட்டுத் தீர்ப்பாயம் நாட்டில் விளையாட்டுத்துறை சார்ந்த சர்ச்சைகளைக் களைவதற்கான ஒரு தனித்துவமான அமைப்பாக செயல்படும். இது சிவில் நீதிமன்றங்களை சார்ந்திருப்பதைக் குறைப்பதையும் விளையாட்டு மேலாண்மை மற்றும் நிர்வாகம் தொடர்பான சர்ச்சைகளுக்கு சுதந்திரமான, விரைவான மற்றும் செலவு குறைந்த தீர்வை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265248®=3&lang=1
***
SS/IR/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2265370)
வருகையாளர் எண்ணிக்கை : 11