பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மரியாதை

இடுகை இடப்பட்ட நாள்: 23 MAR 2026 8:01AM by PIB Chennai

புகழ்பெற்ற சோஷலிசத் தலைவரும் சிந்தனையாளருமான டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (23.03.2026) அவருக்குச் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

டாக்டர் லோகியாவை ஒரு பன்முக ஆளுமை கொண்டவர் என்று  குறிப்பிட்ட திரு மோடி, காலனித்துவ ஆட்சிக்கு எதிராக மக்களைத் திரட்டுவதில் அவர் ஆற்றிய முக்கியப் பங்கையும், 1947-க்குப் பிறகு இந்தியாவின் முன்னேற்றத்திற்காக அவர் வழங்கிய பங்களிப்புகளையும் எடுத்துரைத்தார். டாக்டர் லோகியா ஒரு சிறந்த சிந்தனையாளர் என்றும், நாட்டின் சமூக நீதிக்கான முதன்மையான குரல்களில் ஒருவர் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களை அதிகாரப்படுத்துவதில் அவர் கொண்டிருந்த தளராத உறுதிப்பாடானது இன்றும் தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது என்றும், பாலின சமத்துவம் மற்றும் பங்கேற்பு ஆட்சி முறை குறித்த அவரது சிந்தனைகள் இன்றும் பொருத்தமானதாக இருப்பதாகவும் பிரதமர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் தனது  எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் பிறந்தநாளில் அவருக்கு எனது மரியாதையைச் செலுத்துகிறேன். அவர் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக மக்களைத் திரட்டுவதிலும், 1947-க்குப் பின் இந்தியாவின் முன்னேற்றத்திற்குப் பங்களிப்பதிலும் முக்கியப் பங்காற்றிய ஒரு பன்முக ஆளுமை ஆவார். அவர் ஒரு சிறந்த சிந்தனையாளர் மற்றும் சமூக நீதிக்கான முதன்மையான குரல்களில் ஒருவராகத் திகழ்ந்தார். ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்காக அவர் கொண்டிருந்த தளராத உறுதிப்பாடு தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்கப்படுத்துகிறது. அதேபோல், பாலின சமத்துவம் மற்றும் பங்கேற்பு ஆட்சி குறித்த அவரது சிந்தனைகளும் மிகவும் குறிப்பிடத்தக்கவை."

***

(Release ID: 2243641)

SS/VK/RJ/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2264891) வருகையாளர் எண்ணிக்கை : 11