நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அரசு அங்கீகாரம் பெற்ற சோதனை மையங்களின் வரம்பு விரிவாக்கம் : நுகர்வோர் விவகாரங்கள் துறை அறிவிப்பு

प्रविष्टि तिथि: 24 MAY 2026 10:31AM by PIB Chennai

நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் நுகர்வோர் விவகாரங்கள் துறை, சட்ட அளவியல் விதிகளில் திருத்தம் செய்துள்ளது. இதன் மூலம், பெட்ரோல்/டீசல், சிஎன்ஜி, எல்பிஜி, எல்என்ஜி மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் விநியோகக் கருவிகளின் சரிபார்ப்புப் பணிகள் இனி அரசு அங்கீகாரம் பெற்ற சோதனை மையங்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை துல்லியமான எரிபொருள் விநியோகத்தையும், வர்த்தக வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்யும். மாநில அரசுகள் தங்களின் தேவைக்கேற்ப கூடுதல் அளவீட்டுக் கருவிகளை இதில் சேர்க்கலாம். இதன் கட்டணமாக பெட்ரோல்/டீசலுக்கு ஒரு நாசிலுக்கு ரூ.5 ஆயிரம்  என்றும், மற்ற எரிபொருட்களுக்கு ரூ.10 ஆயிரம்  என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264701&reg=3&lang=1    

***

TV/VK/RJ


(रिलीज़ आईडी: 2264745) आगंतुक पटल : 68
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam