பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உலகத் தண்ணீர் தினத்தில் தண்ணீர் சேமிப்புக்கான தமது உறுதிப்பாட்டைப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்

प्रविष्टि तिथि: 22 MAR 2026 9:05AM by PIB Chennai

உலகத் தண்ணீர் தினத்தை முன்னிட்டு, தண்ணீரின் ஒவ்வொரு துளியையும் சேமிப்பதற்கும், இந்த விலைமதிப்பற்ற வளத்தைப் பொறுப்புடன் பயன்படுத்துவதற்கும் அனைவரும் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்த வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

உயிர்களை நிலைநிறுத்துவதிலும், புவியின் எதிர்காலத்தை வடிவமைப்பதிலும் தண்ணீரின் முக்கியப் பங்கினை வலியுறுத்திய திரு மோடி, நிலையான நடைமுறைகளில் ஈடுபடுபவர்கள், விழிப்புணர்வை ஊக்குவிப்பவர்கள், பாதுகாப்பு கலாச்சாரத்தை வளர்ப்பவர்கள் ஆகியோருக்கும் தனது பாராட்டைத் தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

"தண்ணீர் நம்மை வாழவைக்கிறது மற்றும் நமது புவியின் எதிர்காலத்தை வடிவமைக்கிறது.

உலகத் தண்ணீர் தினத்தன்று, தண்ணீரின் ஒவ்வொரு துளியையும் சேமித்து, அதனைப் பொறுப்புடன் பயன்படுத்துவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவோம். நீடித்த நிலைத்தன்மை கொண்ட நடைமுறைகளில் ஈடுபடுபவர்களையும், விழிப்புணர்வை ஊக்குவிப்பவர்களையும், பாதுகாப்பு கலாச்சாரத்தை வளர்ப்பவர்களையும் பாராட்டுவதற்கான நாளாகவும் இன்று விளங்குகிறது."

***

(Release ID: 2243474)

SS/SMB/KR


(रिलीज़ आईडी: 2263700) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam