பிரதமர் அலுவலகம்
ஈரான் அதிபருடன் பிரதமர் பேசினார்
இடுகை இடப்பட்ட நாள்:
21 MAR 2026 4:26PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அதிபர் டாக்டர் மசூத் பெஷேஷ்கியனுடன், இன்று (21.03.2026) பிராந்திய சூழல் குறித்தும், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் பேச்சு நடத்தினார்.
ஈத் மற்றும் நவ்ரோஸ் பண்டிகைகளையொட்டி, அதிபர் டாக்டர் மசூத் பெஷேஷ்கியனுக்கு பிரதமர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த பேச்சு வார்த்தையின் போது, இந்த பண்டிகைக் காலம், மேற்கு ஆசியப் பிராந்தியத்திற்கு அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளம் நிறைந்த காலகட்டத்தைக் கொண்டு வரும் என்ற பொதுவான நம்பிக்கையை இரு தலைவர்களும் வெளிப்படுத்தினர். இந்த பிராந்தியத்தில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு திரு மோடி கண்டனம் தெரிவித்தார். இத்தகைய நடவடிக்கைகள், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாகவும், உலகளவிலான முக்கிய விநியோக அமைப்புக்களை சீர்குலைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தடையற்ற கப்பல் போக்குவரத்து, சர்வதேச கப்பல் வழித்தடங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். மேலும், ஈரானில் வசிக்கும் இந்தியக் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில், ஈரான் அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவிற்கு, திரு மோடி தனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் பேசியபோது, ஈத் மற்றும் நவ்ரோஸ் பண்டிகைகளையொட்டி அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இந்தப் பண்டிகைக் காலம் மேற்கு ஆசியாவிற்கு அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளமையைக் கொண்டுவரும் என்று நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாகவும், உலகளாவிய விநியோக கட்டமைப்புக்களை சீர்குலைக்கும் வகையிலான முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களைக் கண்டித்தேன்.
தடையற்ற கப்பல் போக்குவரத்தைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும், கப்பல் வழித்தடங்கள் திறந்தும், பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதையும், மீண்டும் வலியுறுத்தினேன்.
ஈரானில் உள்ள இந்திய மக்களின் பாதுகாப்பிற்காக, ஈரான் அளித்து வரும் தொடர் ஆதரவிற்கு பாராட்டு தெரிவித்தேன்."
***
(Release ID: 2243361)
SS/SV/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2263697)
வருகையாளர் எண்ணிக்கை : 1
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam