பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அன்னை சந்திரகாந்தாவின் தெய்வீகம் மற்றும் கருணைமிக்க அருளைச் சிறப்பிக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்

प्रविष्टि तिथि: 21 MAR 2026 8:05AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, அன்னை சந்திரகாந்தாவின், தெய்வீகம் மற்றும் கருணைமிக்க அருளை சிறப்பாக எடுத்துரைக்கும், சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

வலிமை மற்றும் அமைதியின் வடிவமாகத் திகழும் அன்னை தேவி, அனைத்து பக்தர்களின் மீதும், தனது எல்லையற்ற அருளாசிகளைத் தொடர்ந்து பொழிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து, அன்னை சந்திரகாந்தாவின் திருவடிகளில், தனது உளமார்ந்த வணக்கத்தை பிரதமர் சமர்ப்பித்தார். ஒவ்வொரு தனிநபருக்கும் வளமான மற்றும் அதிர்ஷ்டம் நிறைந்த வாழ்வை அருளும் வகையில், அன்னை தேவியின் கருணையைத் தாம் வேண்டுவதாக திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:

சிம்ம வாகனத்தில் வீற்றிருந்து, சக்திவாய்ந்த ஆயுதங்களைத் தாங்கியிருக்கும் அன்னை சந்திரகாந்தா, நம் மீது தனது அருளைப் பொழிந்து, மனம் மகிழ்ச்சியை அருள்வாராக!

***

(Release ID: 2243225)

SS/SV/KR


(रिलीज़ आईडी: 2263682) आगंतुक पटल : 28
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam