பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தாய்லாந்து நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு அனுடின் சார்ன்விரகுலுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

प्रविष्टि तिथि: 20 MAR 2026 2:11PM by PIB Chennai

தாய்லாந்து நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு அனுடின் சார்ன்விரகுலுக்குப், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (20.03.2026) தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்தியா-தாய்லாந்து நாடுகள் இடையே, பல்வேறு துறைகளில், உத்திசார் நட்புறவை வலுப்படுத்தும் வகையில், அந்நாட்டுப் புதிய தலைமையுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றத் தாம் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு, பகிரப்பட்ட நாகரிகப் பாரம்பரியம், நெருங்கிய கலாச்சாரத் தொடர்புகள் மற்றும் மக்கள் தொடர்பு ஆகியவற்றில், ஆழமாக வேரூன்றியுள்ளதாகத் திரு மோடி தெரிவித்துள்ளார். மேலும், இரு நாடுகளின் மக்களுக்கும் அமைதி, முன்னேற்றம் மற்றும் வளம் ஆகியவற்றை உறுதி செய்வதற்கான, பகிரப்பட்ட லட்சியங்களில், இந்தியா-தாய்லாந்து நாடுகள் ஒருமித்த கருத்துடன் இருப்பதாக அவர் உறுதிபடக் கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"தாய்லாந்து நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு அனுடின் சார்ன்விரகுலுக்கு, எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவருடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றுவதற்கு நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். நாம் இருவரும் இணைந்து, இந்தியா-தாய்லாந்து இடையிலான பலதரப்பு உத்திசார் நட்புறவை மேலும் வலுப்படுத்துவோம். நமது உறவுகள், பகிரப்பட்ட நாகரிகப் பாரம்பரியம், நெருங்கிய கலாச்சாரத் தொடர்புகள் மற்றும் மக்கள் தொடர்பு ஆகியவற்றில் வேரூன்றியுள்ளது.  இரு நாட்டு மக்களுக்கும் அமைதி, முன்னேற்றம் மற்றும் வளம்  ஆகியவற்றை உறுதி செய்வதற்கான பகிரப்பட்ட லட்சியங்களில் இந்தியா-தாய்லாந்து நாடுகள் ஒருமித்த கருத்துக்களை கொண்டுள்ளன."

***

(Release ID 2242896)

SS/SV/KR


(रिलीज़ आईडी: 2263678) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam