பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜோர்டான் மன்னருடன் பிரதமர் உரையாடினார்

இடுகை இடப்பட்ட நாள்: 19 MAR 2026 7:06PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் தொலைபேசி வாயிலாக உரையாடி பண்டிகை வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டதுடன், பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்புச் சூழல் குறித்து பேசினார்.

பிரதமர், இரண்டாம் அப்துல்லா மன்னருடன் தொலைபேசியில் உரையாடி, ஈத் வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த உரையாடலின் போது, மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் குறித்து இரு தலைவர்களும் கவலை தெரிவித்தனர். மேலும், பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவில் நிலவச் செய்வதற்கு பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்ஜீய உறவின் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.

மேற்கு ஆசியாவில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கவை என்றும், அவை தவிர்க்கக் கூடிய மோதலை அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். பொருட்கள் மற்றும் எரிசக்தியின் தடையற்ற போக்குவரத்திற்கு இந்தியாவும், ஜோர்டானும் ஆதரவளிக்கின்றன என்று திரு மோடி உறுதிப்படுத்தினார். மேலும், பிராந்தியத்தில் இருந்து இந்தியர்கள் பாதுகாப்பாகத் திரும்புவதற்கு ஜோர்டான் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பிரதமர் தனது மனமார்ந்த பாராட்டைத் தெரிவித்துக் கொண்டார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:

"எனது சகோதரரும், ஜோர்டான் மன்னருமான இரண்டாம் அப்துல்லாவிற்கு தொலைபேசி வாயிலாக எதிர்வரும் ஈத் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். மேற்கு ஆசியாவில் நிலவி வரும் சூழல் குறித்து நாங்கள் கவலை தெரிவித்ததோடு, அப்பகுதியில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவில் நிலவச் செய்ய பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்ஜீய உறவின் அவசியத்தையும் வலியுறுத்தினோம். மேற்கு ஆசியாவில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கவை, இது தவிர்க்கக் கூடிய மோதலை அதிகரிக்க வழிவகுக்கும். இந்தியாவும், ஜோர்டானும் பொருட்கள் மற்றும் எரிசக்தியின் தடையற்ற போக்குவரத்திற்கு ஆதரவளிக்கின்றன. அப்பகுதியில் தவித்த இந்தியர்கள் பாதுகாப்பாகத் திரும்புவதற்கு ஜோர்டான் மேற்கொண்ட முயற்சிகளை மனதாரப் பாராட்டினேன்."  

***

(Release ID: 2242654)

SS/IR/RJ/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2263202) வருகையாளர் எண்ணிக்கை : 3