பிரதமர் அலுவலகம்
பிரதமர், ஓமனின் சுல்தானுடன் உரையாடினார்
प्रविष्टि तिथि:
19 MAR 2026 4:39PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஓமனின் சுல்தான் ஹைதம் பின் தாரிக்குடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார். அப்போது பிராந்தியத்தில் மாறிவரும் சூழல் குறித்து அவர் விவாதித்தார்.
ஓமன் மக்களுக்கு ஈத் வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த கலந்துரையாடலின் போது, பதற்றத்தைத் தணிப்பதற்கும், அதைத் தொடர்ந்து அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலவச் செய்வதற்கும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்ஜீய அளவிலான நிலைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். ஓமனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மீறப்பட்டதை இந்தியா கண்டிப்பதாக பிரதமர் மீண்டும் கூறினார். மேலும், இந்திய நாட்டினர் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பாகத் திரும்புவதற்கு ஓமன் மேற்கொண்ட முயற்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். ஹோர்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்திற்காக இந்தியாவும் ஓமனும் துணை நிற்கின்றன என்றும் திரு மோடி மேலும் தெரிவித்தார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:
"எனது சகோதரர் சுல்தான் ஹைதம் பின் தாரிக்குடன் ஆக்கப்பூர்வ உரையாடலில் ஈடுபட்டேன். மேலும், ஓமன் மக்களுக்கு எனது ஈத் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
பதற்றத்தைத் தணிப்பதற்கும், அதைத் தொடர்ந்து அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலவச் செய்வதற்கும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்ஜீய நிலையிலான அளவில் முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.
ஓமனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் மீறலை இந்தியா மீண்டும் கண்டித்ததுடன், இந்தியக் குடிமக்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பாகத் திரும்புவதற்கு ஓமன் மேற்கொண்ட முயற்சிகளையும் பாராட்டினேன்.
இந்தியாவும், ஓமனும் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்திற்கு ஆதரவளிக்கின்றன."
***
(Release ID: 2242529)
SS/IR/RJ
(रिलीज़ आईडी: 2263198)
आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam