பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
பருத்தி விவசாயிகளுக்கு நேரடியாக உதவிடும் வகையில், இந்திய பருத்திக் கழகத்திற்கு 1,718.56 கோடி ரூபாய் மதிப்பிலான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
18 MAR 2026 4:07PM by PIB Chennai
விவசாயிகளின் நலனை வலுப்படுத்துவதற்கும் தற்சார்பு இந்தியாவிற்கான தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் ஒரு முக்கிய நடவடிக்கையாக 2023-24-ம் ஆண்டு பருத்தி பருவத்திற்காக இந்திய பருத்திக் கழகத்திற்கு 1718.56 கோடி ரூபாய் மதிப்பிலான குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவதற்கான நிதி ஒதுக்கீட்டிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பருத்தி விவசாயிகளுக்கு நேரடியாக உதவிடும் வகையில், இந்த நிதி ஒதுக்கீட்டின் முக்கிய நோக்கமாகும். பருத்தி விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கு பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையைக் காட்டிலும் குறைவாக இருக்கும் காலங்களில் இவை பெரிதும் உதவிகரமாக அமையும். பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பதன் மூலம் அதன் விலைகளை நிலைப்படுத்துவதற்கும் விவசாயிகள் நிதி நெருக்கடி காரணமாக தங்களது விளைபொருட்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதை தடுப்பதற்கும் விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் இத்தகைய நடவடிக்கைகள் உதவிகரமாக உள்ளன.
வேளாண் சந்தைகளில் அனைவரையும் உள்ளடக்கிய நலன்களை மேம்படுத்துவதன் மூலம் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் பொருளாதார பாதுகாப்பிற்கு இந்த குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. நாட்டின் மிக முக்கியமான பணப்பயிர்களின் ஒன்றாக பருத்தி உற்பத்தி உள்ளது. 60 லட்சம் விவசாயிகள் பருத்தி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பருத்தியானது விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு உதவுவதுடன் பதப்படுத்துதல், வர்த்தகம் மற்றும் ஜவுளித் துறை உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள 5 கோடி மக்களின் வாழ்வாதாரததிற்கும் உறுதுணையாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2241788®=3&lang=2
-----
TV/SV/KPG/
(வெளியீட்டு அடையாள எண்: 2263185)
வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க:
Telugu
,
Kannada
,
Manipuri
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Malayalam