பிரதமர் அலுவலகம்
மத்தியப் பிரதேசம் இந்தூரில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
18 MAR 2026 1:52PM by PIB Chennai
இந்தூரில் நிகழ்ந்த துயரமான தீ விபத்து குறித்துப் பிரதமர் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நிதியையும் அறிவித்துள்ளார்.
இந்தூரில் நிகழ்ந்த தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து மிகுந்த வேதனையை வெளிப்படுத்திய பிரதமர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் திரு மோடி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து மிகுந்த வேதனை அடைகிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்.
***
(Release ID: 2241652)
TV/IR/RJ/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2263181)
வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க:
Marathi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam