வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஆசிய உற்பத்தி அமைப்பு நிர்வாகக் குழுவின் 68-வது அமர்வு புதுதில்லியில் நடைபெறுகிறது
प्रविष्टि तिथि:
20 MAY 2026 12:00PM by PIB Chennai
ஆசிய உற்பத்தி அமைப்பு நிர்வாகக் குழுவின் 68-வது அமர்வு புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 2026 மே 20 முதல் 22 வரை நடைபெறுகிறது. இதில் ஆசிய உற்பத்தி அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள 20 நாடுகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட உயர் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
2026 மே 21 அன்று நடைபெறும் தொடக்க அமர்வில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கலந்து கொள்கிறார். ஆசிய உற்பத்தி அமைப்பின் இயக்குநர்கள் ஆலோசகர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், பூடான் ஆகிய நாடுகள் மற்றும் உலகளாவிய பசுமை வளர்ச்சி மையத்தின் பார்வையாளர்களும் பங்கேற்க உள்ளனர்.
இந்த 3 நாள் நிகழ்வில் ஆசிய உற்பத்தி அமைப்பின் 2030-ம் ஆண்டுக்கான தொலைநோக்குத் திட்டம், 2027-28-ம் ஆண்டுக்கான முதல் நிலை நிதிநிலை அறிக்கை மற்றும் ஆசிய உற்பத்தி அமைப்பின் செயலாளர் தேர்தலுக்கான நடைமுறைகள் குறித்த ஆய்வு தொடர்பாக உயர்நிலை விவாதங்கள் நடைபெறவுள்ளது.
ஆசிய உற்பத்தி அமைப்பின் 2026-27-ம் ஆண்டுக்கான தலைமை மற்றும் துணை தலைமைக்கான தேர்தல், ஆண்டு மற்றும் நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்த அமர்வில் இடம் பெறவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263106®=3&lang=1
***
SS/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2263161)
आगंतुक पटल : 48