விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான்,ம் ஒடிஷா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி ஆகியோர் புவனேஸ்வரில் கிழக்கு மண்டல வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்தனர்

இடுகை இடப்பட்ட நாள்: 19 MAY 2026 3:57PM by PIB Chennai

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், ஒடிஷா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜியுடன் புவனேஸ்வரில்  கிழக்கு மண்டல வேளாண் மாநாட்டை இன்று தொடங்கி வைத்தார். கிழக்கு இந்தியாவின் விவசாய மாற்றம் தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஒடிசா, பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளை இந்த மாநாடு ஒன்றிணைத்தது.

 

பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிப்பது, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த விவசாயம், இயற்கை விவசாயம், விவசாயிகளின் பதிவேடு, தோட்டக்கலை, விவசாயக் கடன், சந்தைப்படுத்தல் சீர்திருத்தங்கள், போலி விவசாய இடுபொருட்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டது.

தொடக்க அமர்வில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், இந்த மாநாடு வெறும் முறையான நிகழ்வு மட்டுமல்ல, கிழக்கு இந்தியாவில் விவசாயம், விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் பிராந்திய விவசாய யுத்திக்கான  புதிய திசையை வடிவமைப்பதற்கான ஒரு தீவிரமான தளம் என்று கூறினார்.

 

 

விவசாயிகளை 'அன்னதாதாக்கள்' மட்டுமல்ல, 'ஜீவந்தாதாக்கள்' என்றும் அழைத்த திரு சவுகான், விவசாயிகளுக்கு சேவை செய்வது கடவுளுக்கு சேவை செய்வதற்கு சமம் என்றார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா வளர்ந்த, தன்னிறைவு பெற்ற, வளமான மற்றும் சக்திவாய்ந்த நாடாக மாறுவதை நோக்கி முன்னேறி வருவதாகவும், விவசாயம் இந்தப் பயணத்தின் முதுகெலும்பாக இருப்பதாகவும் அவர் கூறினார். 1.4 பில்லியன் குடிமக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், சத்தான உணவை வழங்குதல், சிறந்த வாழ்வாதாரம் மற்றும் விவசாயிகளுக்கு அதிக வருமானம் ஆகியவற்றை உறுதி செய்தல் ஆகிய மூன்று முக்கிய முன்னுரிமைகளை விவசாயத் துறைக்கு அவர் விளக்கினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262782&reg=3&lang=1

(Release ID: 2262782)

****

TV/PKV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2263050) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Odia , Kannada