ஆயுஷ்
ஆயுஷ் கிரிட் திட்டத்தின் கீழ் 'ஆயுஷ் அனுதான்' இணையதளம்: மத்திய அமைச்சர் திரு. பிரதாப்ராவ் ஜாதவ் தொடங்கி வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
19 MAY 2026 6:03PM by PIB Chennai
ஆயுஷ் துறையில் டிஜிட்டல் நிர்வாகத்தை வலுப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், மத்திய ஆயுஷ் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் திரு. பிரதாப்ராவ் ஜாதவ் புது தில்லியில் 'ஆயுஷ் அனுதான்' இணையதளத்தைத் தொடங்கி வைத்தார். ஆயுஷ் அமைச்சகத்தின் மத்திய திட்டங்களின் கீழ் நிதியுதவி கோரும் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல், பரிசீலித்தல் மற்றும் கண்காணித்தல் போன்ற பணிகளை எளிதாக்க 'ஆயுஷ் கிரிட்' திட்டத்தின் கீழ் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், "பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் 'தொழில் செய்வதை எளிதாக்குதல்' மற்றும் 'வாழ்க்கையை எளிதாக்குதல்' என்ற தொலைநோக்கு பார்வையின் கீழ் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது மானிய மேலாண்மை செயல்பாட்டில் 100% வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்யும். காகிதமில்லா நிர்வாகத்தை ஊக்குவிக்கும் வகையில், நிறுவனங்கள் தங்கள் முன்மொழிவுகளை முழுமையாக ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்" என்றார்.
மேலும், 'தன்னார்வ தொண்டு நிறுவன தர்பன்' தளத்துடனான இணைப்பு, விண்ணப்பதாரர்களின் நம்பகத்தன்மையை விரைவாகவும், பிழையின்றியும் சரிபார்க்க உதவும். கல்வி, ஆராய்ச்சி மற்றும் மருத்துவம் சார்ந்த பல டிஜிட்டல் சேவைகள் ஏற்கனவே ஆயுஷ் கிரிட் கீழ் வெளிப்படையாக வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்யா ராஜேஷ் கோடேச்சா, இணைச் செயலாளர்கள் கவிதா ஜெயின், திருமதி. அலர்மேல்மங்கை மற்றும் செல்வி மொனாலிசா தாஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262897®=3&lang=1
செய்தி அடையாள எண்: 2262897
****
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2263009)
வருகையாளர் எண்ணிக்கை : 10