பாதுகாப்பு அமைச்சகம்
வியட்நாம் சென்றுள்ள பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சருடன் இருதரப்பு பேச்சு நடத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
19 MAY 2026 12:38PM by PIB Chennai
வியட்நாம் சென்றுள்ள பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2026 மே 19 அன்று ஹனோயில், வியட்நாம் துணைப்பிரதமரும், தேசிய பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் பான் வான் கியாங்குடன் இருதரப்பு பேச்சுக்கள் நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான வளர்ந்து வரும் பாதுகாப்பு கூட்டாண்மை குறித்து ஆய்வு செய்தனர். கடல்சார் பாதுகாப்பு, பாதுகாப்பு தளவாட உற்பத்தித் தொழில்துறை, பயிற்சி மற்றும் பிராந்திய நிலைத்தன்மை ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து விவாதித்தனர்.
பரஸ்பரம், நலன் சார்ந்த பிராந்தியம் மற்றும் உலகளாவிய பாதுகாப்பு மேம்பாடுகள் குறித்து இருதரப்பும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டன. இந்தியப் பசிபிக் பிராந்தியத்தில் அமைதியைப் பராமரிப்பது, நிலைத்தன்மை, பாதுகாப்பு, சுதந்திரமான கடல்வழிப் பயணம் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்கள். ராணுவப் பயிற்சி, பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் ஒருங்கிணைப்பு, கடல்சார் பாதுகாப்பு, திறன் மேம்பாடு, உயர்நிலைப் பரிமாற்றங்கள் உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிவகைகள் குறித்து விவாதித்தனர்.
வழக்கமான உரையாடல், கூட்டுப்பயிற்சி மற்றும் பரிமாற்றத் திட்டங்கள் மூலம் இரு நாடுகளின் ராணுவப் படைகள் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்தவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
வியட்நாமுடன் இந்தியாவின் மேம்பட்ட விரிவான உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்துவது என்ற உறுதிப்பாட்டை பாதுகாப்பு அமைச்சர் வெளிப்படுத்தினார். இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பு கட்டமைப்பின் கீழ், வியட்நாம் ராணுவத்தின் நவீனமயமாக்கல், திறன் மேம்பாட்டு முன்முயற்சிகள் ஆகியவற்றுக்கு ஆதரவளிப்பதில் இந்தியாவின் தீர்மானத்தை அவர் உறுதிபடுத்தினார்.
இருநாடுகளுக்கு இடையேயான வளர்ந்து வரும் உத்திசார் கூட்டாண்மைக் குறித்தும் நீண்டகால நட்புறவு நாடாக விளங்கும் இந்தியாவின் ஆதரவுக்கும் ஜெனரல் பான் வான் கியாங் பாராட்டுத் தெரிவித்தார்.
வியட்நாமில் உள்ள விமானப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில், மொழி ஆய்வகத்தை இருநாட்டுப் பாதுகாப்பு அமைச்சர்களும் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தனர். இந்த ஆய்வகம், இந்தியாவின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262682®=3&lang=1
***
SS/IR/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2262805)
வருகையாளர் எண்ணிக்கை : 6