மக்களவை செயலகம்
azadi ka amrit mahotsav

நீதிபதி திரு யஷ்வந்த் வர்மா தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் நீதிபதிகள் விசாரணைக் குழு, மக்களவைத் தலைவரிடம் அறிக்கை சமர்ப்பித்தது

प्रविष्टि तिथि: 18 MAY 2026 9:31PM by PIB Chennai

நீதிபதி திரு யஷ்வந்த் வர்மா தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்து வரும் நீதிபதிகள் விசாரணைக் குழு, தனது அறிக்கையை இன்று (18.05.2026) நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லாவிடம் சமர்ப்பித்தது. 1968-ஆம் ஆண்டு நீதிபதிகள் விசாரணைச் சட்டத்தின் கீழ் உள்ள சட்டப்பூர்வ தேவைகளுக்கு இணங்க சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை, உரிய நேரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்படும்.

 

நீதிபதிகள் விசாரணைக் குழுவின் தலைமை அதிகாரியான உச்ச நீதிமன்ற நீதிபதி திரு அரவிந்த் குமார், மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு சந்திரசேகர், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் திரு பி.வி. ஆச்சார்யா ஆகியோர் இன்று (18 மே 2026) நாடாளுமன்ற வளாகத்தில், நீதிபதிகள் விசாரணைக் குழுவின் அறிக்கையை மக்களவைத் தலைவரிடம் சமர்ப்பித்தனர்.

 

இக்குழு, மக்களவைத் தலைவரால் 12 ஆகஸ்ட் 2025 அன்று அமைக்கப்பட்டது.

(Release ID : 2262562)

****

TV/PLM/SH

 


(रिलीज़ आईडी: 2262576) आगंतुक पटल : 54
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam