விவசாயத்துறை அமைச்சகம்
விவசாயிகளின் வாழ்க்கையை எளிமையாக்க முக்கிய சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படுகின்றன - மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான்
இடுகை இடப்பட்ட நாள்:
18 MAY 2026 9:03PM by PIB Chennai
விவசாயிகள், வர்த்தகர்கள், வேளாண் துறை சார்ந்தவர்களுக்கான செயல்முறைகளை எளிதாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய வேளாண்மை அமைச்சகம் இன்று ஆய்வு செய்தது. மேலும், வேளாண் நிர்வாகத்தை மேலும் வெளிப்படையானதாகவும், தொழில்நுட்பம் சார்ந்ததாகவும், திறமையானதாகவும் மாற்றுவதற்காக, பிரதமர் திரு நரேந்திர மோடியின் 'சீர்திருத்த தொடரின்' கீழ் அமைச்சகம் மாற்றங்களை விரைவுபடுத்தும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்தார்.
கூட்டத்தின் போது, வேளாண்மை அமைச்சகத்தின் செயலாளர் திரு ஆதிஷ் சந்திரா, அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு சீர்திருத்தங்கள், வரவிருக்கும் சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகியவை குறித்து மத்திய வேளாண்மை அமைச்சருக்கு விரிவாக விளக்கினார்.
வீட்டுப் பூச்சிக்கொல்லிகளின் விற்பனை மற்றும் சேமிப்பிற்கான உரிமம் வழங்கும் செயல்முறை கணிசமாக எளிமையாக்கப்பட்டுள்ளது என்று செயலாளர் ஆதிஷ் சந்திரா தெரிவித்தார். உரிமம் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் மூன்று பக்கங்களிலிருந்து ஒரே பக்கமாகக் குறைக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
இந்த சீர்திருத்தத்தால், கொசு விரட்டி விரிப்புகள், சுருள்கள், திரவ ஆவியாக்கிகள், கரப்பான்பூச்சித் தெளிப்பான்கள் போன்ற பொருட்களை விற்பனை செய்யும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை கடைக்காரர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேளாண் பொருட்களின் இறக்குமதியை எளிதாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் குறித்த விவரங்களை வழங்கிய அதிகாரிகள், நாட்டிலுள்ள அனைத்து 649 சுங்கத் துறைமுகங்களிலும் டிஜிட்டல் ஒருங்கிணைப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தனர்.
வேளாண் துறையில் வெளிப்படைத்தன்மை, தொழில்நுட்பத் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக சீர்திருத்த செயல்முறையை மேலும் தீவிரப்படுத்துமாறு மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த சீர்திருத்தங்களின் நோக்கம், விவசாயிகள், வர்த்தகர்கள், தொழில்முனைவோர், வேளாண் துறையுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினர் ஆகியோருக்கு நடைமுறைகளை எளிமையாக மாற்றுவதே என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262550®=3&lang=1
(Release ID: 2262550)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2262574)
வருகையாளர் எண்ணிக்கை : 16