உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நக்சல் தீவிரவாதம் இல்லாத நாடாக இந்தியா மாறியுள்ளது - குறுகிய காலத்தில் இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது : மத்திய அமைச்சர் திரு அமித் ஷா

இடுகை இடப்பட்ட நாள்: 18 MAY 2026 8:23PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று சத்தீஸ்கரின் ஜக்தல்பூரில், மத்திய ஆயுதக் காவல் படையினர், நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரை இன்று (18.05.2026) சந்தித்துக் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில், சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தியோ சாய், துணை முதலமைச்சர் திரு விஜய் சர்மா, மத்திய உள்துறை செயலாளர் திரு கோவிந்த் மோகன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 

இதில் உரையாற்றிய திரு அமித் ஷா, இந்தியா இப்போது நக்சலிசத்திலிருந்து விடுபட்டுள்ளது என்று பெருமையுடன் கூற முடியும் என்றார். இது ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினரின் தியாகத்தால் அடையப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். 60 ஆண்டு சிக்கலுக்கு வெறும் மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் தீர்வு எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

பஸ்தர் பகுதி நாட்டின் வளர்ச்சியடைந்த பகுதியாக மாறும் என்று அவர் தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, ஏழைகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள், பழங்குடியினர் ஆகியோருக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

 

 பஸ்தரின் உணவு வகைகள், கலை, இசை, நடனம், விளையாட்டு, பாரம்பரியங்கள் ஆகியவற்றை அவர் பாராட்டினார். நக்சல் வன்முறையால் இந்த வளமான கலாச்சார அம்சங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன என்றும் அவர் கூறினார். இருப்பினும், பஸ்தர் இப்போது ஒரு புதிய விடியலைக் கண்டு, வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது என்று திரு அமித் ஷா தெரிவித்தார். சரணடைந்த நக்சலைட்டுகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் கல்வி திறன் மேம்பாட்டுடன் மறுவாழ்வு அளிக்கப்பட்டு, அவர்கள் கண்ணியத்துடன் சமூகத்தின் பிரதான நீரோட்டத்தில் மீண்டும் இணைய வகை செய்யப்படும் என்றும் திரு அமித் ஷா உறுதியளித்தார்

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262512&reg=3&lang=1

(Release ID: 2262512)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2262559) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Marathi , हिन्दी , Gujarati , Kannada