பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வியட்நாம், தென் கொரியா ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொள்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
18 MAY 2026 10:21AM by PIB Chennai
பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2026 மே 18, 19 ஆகிய தேதிகளில் வியட்நாமிலும், மே 19 முதல் 21-ம் தேதி வரை தென்கொரியாவிலும் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளார்.
தாம் புறப்படுவதற்கு முன்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வளைதள எக்ஸ் பதிவில், இரண்டு ஆசிய நாடுகளுடனான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு இப்பயணத்தை எதிர்நோக்கி இருப்பதாக கூறியுள்ளார். உத்திசார்ந்த ராணுவ ஒத்துழைப்பு, பாதுகாப்பு தளவாட உற்பத்திக் கூட்டாண்மையை வலுப்படுத்துதல், கடல்சார் ஒருங்கிணைப்பை ஊக்குவித்தல், இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இப்பயணத்தின் போது, வியட்நாமின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ஃபான் வான் ஜியாங்குடன் திரு ராஜ்நாத் சிங் இருதரப்புப் பேச்சு நடத்தவுள்ளார்.
தமது தென்கொரிய பயணத்தின்போது திரு ராஜ்நாத் சிங் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் திரு அன் கியூ-பேக் - உடன் பேச்சு நடத்த உள்ளார். இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை அமைச்சர்கள் ஆய்வுசெய்வதுடன், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வழிவகைகளை கண்டறிய உள்ளனர். அத்துடன் பிராந்திய மற்றும் சர்வதேச எதிர்காலம் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொள்கின்றனர்.
தென்கொரிய பாதுகாப்பு தளவாட கொள்முதல் திட்ட நிர்வாக அமைச்சர் திரு லீ – யையும் திரு ராஜ்நாத் சிங் சந்திக்க உள்ளார். இந்தியா – கொரியா இடையேயான வர்த்தக வட்டமேசை கூட்டத்திற்கும் அவர் தலைமை தாங்குகிறார்.
கொரியப் போரில் இந்தியாவின் பங்களிப்பு என்பது, உலகளாவிய அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பால் வரையறுக்கப்பட்ட, வரலாற்றின் மிக ஆழமான அத்தியாயங்களில் ஒன்றாகும். இந்திய இராணுவத்தின் 60 பாராசூட் கள அவசர ஊர்தி பிரிவு அங்கு அனுப்பிவைக்கப்பட்டது.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகச் சேவையாற்றிய இப்பிரிவு, இரண்டு லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து, சுமார் 2,500 அறுவை சிகிச்சைகளையும் செய்தது. அத்துடன் பெருமளவிலான மக்களுக்கும் அவர்கள் சிகிச்சை அளித்தனர்.
***
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262109®=3&lang=1
SS/IR/LDN/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2262227)
வருகையாளர் எண்ணிக்கை : 3