மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
தேசிய திறந்த நிலை பள்ளி, மாநிலங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம், பள்ளி செல்லாக் குழந்தைகள் கல்வியை தொடர்வதற்கான உத்தியை கல்வி அமைச்சகம் ஆய்வு செய்கிறது
இடுகை இடப்பட்ட நாள்:
16 MAY 2026 3:55PM by PIB Chennai
கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி எழுத்தறிவுத் துறையின் செயலாளர் திரு சஞ்சய் குமார் தலைமையில் , 14 முதல் 18 வயதுக்குட்பட்ட, பள்ளி செல்லாத குழந்தைகள் குறித்து ஆலோசிப்பதற்கும், உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பள்ளிக் கல்வித் துறையின் இணைச் செயலாளர் திருமதி பிராச்சி பாண்டே, தேசிய திறந்தநிலைப் பள்ளிக் கல்வி நிறுவனமான என்ஐஓஎஸ்-ன் (NIOS) தலைவர் பேராசிரியர் அகிலேஷ் மிஸ்ரா, கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், மாநில அரசுகளின் பிரதிநிதிகள், அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள், மாநில கல்வித் துறைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் திரு சஞ்சய் குமார், பள்ளி இடைநிற்றல் குறித்த கவலையை எடுத்துரைத்தார். மேலும், கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி, ஒன்றாம் வகுப்பில் சேரும் ஒவ்வொரு 100 குழந்தைகளில் 62 பேர் மட்டுமே பன்னிரண்டாம் வகுப்பை அடைகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார். சமீபத்திய மதிப்பீடுகளின்படி, 14 முதல் 18 வயதுக்குட்பட்ட இரண்டு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் தற்போது பள்ளிக்குச் செல்லாமல் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.
பொருளாதார நிர்பந்தங்கள், குடும்பப் பொறுப்புகள், வாழ்வாதாரம் சார்ந்த சவால்கள் ஆகியவை குழந்தைகள் பள்ளிக் கல்வியை விடுவதற்கு காரணமாக அமையும் முக்கியக் காரணிகள் என்று அவர் குறிப்பிட்டார். அவசரத் தலையீட்டின் அவசியத்தை வலியுறுத்திய திரு சஞ்சய் குமார், ஒவ்வொரு குழந்தைக்கும் குறைந்தபட்சம் இடைநிலை, மேல்நிலைக் கல்வி வரை கல்வி கிடைப்பதோடு, உள்ளூர் பொருளாதார வாய்ப்புகளுக்கு ஏற்ற வேலைவாய்ப்புத் திறன்களும் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
குழந்தைகளை முறையான பள்ளிக்கல்வியில் மீண்டும் இணைப்பதில் முதன்மை கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றாலும், வழக்கமான பள்ளிகளுக்குத் திரும்ப முடியாதவர்களை, திறந்த நிலை, தொலைநிலைக் கற்றல் வழிமுறைகள் மூலம், தேசிய திறந்தநிலைப் பள்ளிக் கல்வி நிறுவனமான என்ஐஓஎஸ் (NIOS), மாநில திறந்தநிலைப் பள்ளிகள் போன்றவை இணைக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளைக் கண்டறிதல், சேர்த்தல், தக்கவைத்தல் ஆகியவற்றை உறுதி செய்வதற்காக, மாநில, மாவட்ட, உள்ளூர் மட்டங்களில் உள்ள துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு தேவை என்பதை அவர் வலியுறுத்தினார் . இந்த முயற்சி முறையாகத் தொடங்கப்படுவதற்கு முன்னர், என்ஐஓஎஸ் ஒருங்கிணைப்பாளர்களைப் பதிவு செய்தல், முதற்கட்ட ஆய்வுகள் மற்றும் குழந்தைகளின் ஆரம்பப் பதிவு உள்ளிட்ட ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261735®=3&lang=1
(Release ID: 2261735)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2261778)
வருகையாளர் எண்ணிக்கை : 6